அமைதியைத்தேடி ஒரு பயணம்... இந்தியாவின் அழகிய மலைச்சரிவுகள்!

கல்கி டெஸ்க்

பனி மூடிய சிகரங்கள், ஆப்பிள் பழத்தோட்டங்கள், சாகச விளையாட்டுகள் என கண்ணுக்கும் மனதிற்கும் விருந்தளிக்கும் மணாலி ரசிக்க வேண்டிய மலைவாச ஸ்தலங்களில் ஒன்று.

மணாலி

அழகிய தேயிலை தோட்டங்களுக்கு பெயர்போன டார்ஜிலிங் செல்லலாம். கண்களுக்கு குளிர்ச்சியாகவும், பரபரப்பான நகர வாழ்க்கையிலிருந்து சிறிது ரிலாக்ஸ் செய்து கொள்ளவும் தேர்ந்தெடுக்க வேண்டிய இடம்.

டார்ஜிலிங்

இமயமலையின் அழகிய காட்சிகள், அங்குள்ள அழகிய கட்டடக்கலை, பனித்துளி சாரல்கள் சிம்லா சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து இழுக்கக்கூடியவை.

இமயமலை

சாகச பிரியர்களுக்கும், இயற்கை நிறைந்த அழகிய காட்சிகளை காண்பதற்கும் இளசுகளின் மிகவும் ஃபேவரட்டான இடமாக உள்ள லடாக்கை வாய்ப்பு கிடைத்தால் மிஸ் பண்ணாமல் பார்க்கவேண்டும்.

லடாக்

அடர்ந்த காடுகள் அமைதியான ஏரிகள் அதிகாலை பனித்துளிகள் நிறைந்த புல்வெளிகள் பூக்கள் என இயற்கையோடு இணைந்த கொடைக்கானல் பார்த்து ரசிக்க வேண்டிய சிறந்த மலைவாச ஸ்தலமாகும்.

கொடைக்கானல்

மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள பிரபலமான மலை வாசஸ்தலமான மூணாறு தேனிலவு சுற்றுலாவுக்கு மட்டுமின்றி அனைவரையும் கவர்ந்திருக்கும் சிறந்த சுற்றுலா ஸ்தலமாகும்.

மூணாறு

காலங்கள் மாறினாலும் மலைகளின் ராணியான ஊட்டியின் அழகு என்றும் குறைந்ததே இல்லை. குளிர்ந்த காற்று, அடர்ந்த காடுகள், பசுமையான புல்வெளிகள், வெண்மேகக் கூட்டங்கள் என மனதுக்கு குளிர்ச்சி ஊட்டும் ஊட்டியைக் காணத்தவறாதீர்கள்.

ஊட்டி

ஏராளமான நீர்வீழ்ச்சிகள் பசுமை நிறைந்த ஏரிகள் என சுற்றுலா பயணிகளின் சொர்க்க பூமியாக விளங்கும் சிக்மகளூரு மிகவும் ரசித்து காண வேண்டிய இடமாகும்.

சிக்மகளூரு

காப்பி தோட்டங்கள் நிறைந்த கூர்க் கர்நாடக மாநிலத்தில் உள்ளது. இங்கு கொட்டும் நீர்வீழ்ச்சிகளும், அழகிய தேயிலை தோட்டங்களும், பசுமை நிறைந்த மலைப்பகுதிகளும், இயற்கை கொஞ்சும் காட்சிகளும், மனதுக்கு அமைதி தரும்.

கூர்க்

காஷ்மீரில் பஹல்காமின் கிராமம் போன்ற சூழலும், லிடர் நதியின் அழகும் மற்றும் அரு பள்ளத்தாக்கின் (Aru Valley) அழகையும் ரசிக்கலாம். மிகவும் ரம்யமான இடம்.

பஹல்காம்

கிழக்கு தொடர்ச்சிமலை சேர்வராயன் மலைத்தொடரில் உள்ள ஏற்காடு சிறந்த மலைவாச ஸ்தலமாகும். ஏழைகளின் ஊட்டி என அழைக்கப்படும் ஏற்காடு கடல் மட்டத்திலிருந்து 1515 மீட்டர் உயரத்தில் உள்ள இயற்கை கொஞ்சும் அழகிய இடம்.

ஏற்காடு
natural remedies
உடலை இரும்பு போல மாற்றும் சில இயற்கை வழிகள்! ஆரோக்கியம் உங்கள் கையில்!