பத்மப்ரியா
மூட்டு வலிக்கு மஞ்சளுடன் கடுகை அரைத்துப் பற்று போட வலி நீங்கும்.
ஒரு டம்ளர் மோரில் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து பருகி வர, ரத்த அழுத்தம் சீர்படும்.
மாவிலையை சாம்பலாக்கி, பொடி செய்து, தேங்காய் எண்ணெயில் கலந்து தடவ, நாள்பட்ட புண் விரைவில் குணமாகும்.
குங்குமப்பூவுடன் தேன் கலந்து இரண்டு நாட்கள் தினசரி இரண்டு வேளை உட்கொள்ள, சுவாசக் குழாய் அலர்ஜி நீங்கும்.
தூதுவளை பொடி மிளகு பொடி இரண்டையும் பாலில் கலந்து சாப்பிட, தொடர் தும்மல் நிற்கும்.
சுக்கு கஷாயத்தில் துளசி சாற்றைக் கலந்து உட்கொள்ள, வாய்வுத் தொல்லை அறவே அகலும்.
தேனையும், எலுமிச்சை சாறையும் கலந்து லேசாக சூடாக்கிக் குடித்தால், வறட்டு இருமல் குணமாகும்.
வெந்தயத்தை வேக வைத்து, தேன் விட்டுக் கடைந்து உட்கொள்ள, மார்பு வலி குணமாகும்
வெள்ளைப் பூண்டை உப்பு சேர்த்து இடித்து, சுளுக்கு ஏற்பட்ட இடத்தில் தடவி வர, சுளுக்கு விலகும்.
மாதுளம் பூவை கஷாயம் செய்து குடித்து வர, வயிற்றுக் கடுப்பு, எரிச்சல் குணமாகும்.
தேனில் ஊற வைத்த நெல்லிக்கனியை தினசரி ஒன்று சாப்பிட்டு வர, நுரையீரல், இருதயம் பலம் பெறும்.
தும்பை இலை, வெந்தயம் சேர்த்து அரைத்து நெற்றியில் பற்றுப் போட, மஞ்சள் காமாலை நோய் குணமாகும்.