வாசுதேவன்
இங்கு நகர பகுதிகள் தவிர ரோடுகள் காண முடியாது. இங்கு பயணம் செய்ய படகுகள், விமானங்கள், ஹெலிகாப்டார்கள், பனி ஊர்தி ( snowmobile ) நாய்கள் இழுத்து செல்லும் ஸ்லேட்ஜ்கள் பயன்படுத்தப்படுகின்றன.
தலை நகரம் நுக் ( Nuuk ). இங்கு அதிக அளவில் பழங்கால அருங்காட்சியங்கள் உள்ளன. சுற்றி இருக்கும் மலைகள் இயற்கை சூழ்நிலைக்கு இன்னும் அழகு சேர்க்கின்றன.
வருடந்தோறும் மே 25 முதல் ஜூலை 25 வரையில் இந்த நாட்டில் சூரியனின் ஆதிக்கம் தான். நாள் முழுவதும் மட்டும் அல்லாமலும் இரவிலும் சூரியன் ஓய்வு எடுத்துக் கொள்வது இல்லை இங்கு.
மிகவும் நீளமான நாள் ஆன ஜூன் 21 அன்று இங்கு தேசிய விடுமுறை தினம் ஆகும். கிரீன்லான்ட்டில் பெரும்பான்மையான மக்கள் பேச உபயோக்கிக்கும் மொழி கிரீன்லான்டிக் ( குறிப்பாக களால்லிசுட் ( kalaallisut ) மற்றும் டேனிஷ்.
அதிக நில பரப்பளவை கொண்ட நாடு இது. சுமார் 2.16 மிலியன் சதுர கிலோ மீட்டர்.
மீன் பிடிப்பது முக்கிய தொழில் ஆகும். இங்கு திமிங்கலங்களும், சீல்களும் (நீர் நாய்) வேட்டையாடப் படுகின்றன. மற்ற உணவு பொருட்கள் இறக்குமதி செய்து கொள்ளப் படுகின்றது.
நீல திமிங்கிலங்கள் பாதுகாக்கப் படுகின்றன. அவைகளை வேட்டை ஆடுவது தடை செய்யப்பட்டுள்ளது. திமிங்கலங்கள், சீல்களின் மாமிசம் ஏற்றுமதி செய்ய அனுமதி கிடையாது.
இங்கு மனித இனம் கடந்த 4500 வருடங்களுக்கு மேலாக வாழ்ந்து வருவதாக சரித்திர ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
பூர்வீக மக்கள் அவர்களை 'எஸ்கிமோ' என்று குறிப்பிடுவதை விரும்புவதில்லை. நில பரப்பில் பெரும் பாலான அளவு உரைபனியால் மூடப்பட்டுள்ளது.
ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பின் படி பல லட்ச வருடங்களுக்கு முன்பு இந்த பகுதி பச்சை பசேல் என்று காட்சி அளித்ததாம். காலப் போக்கில் பனி சூழ்ந்துக் கொண்டு தற்போதைய நிலைமைக்கு தள்ளப் பட்டுள்ளதாம்.
டென்மார்க் ராஜ்ஜியத்தில் கிரீன்லான்ட் ஒரு தன்னாட்ச்சி பிரதேசமாகும்.
கிரீன்லான்ட் ஷார்க் 270 வருடங்கள் வாழும். இவை குளிர் நிறைந்த கடல் பகுதியில் வாசம் செய்வதால் மெதுவாக நீந்தும் தன்மை கொண்டவை.
பனி பகுதி இல்லாத நில பரப்பு கிட்டதட்ட ஸ்வீடன் அளவு இருக்கும். கிரீன்லான்டில் ஜனதொகை அதிகம் கிடையாது.
கிரீன்லான்டில் பல நூற்றுக் கணக்கான பணியாறுகள் ( glacier) உள்ளன. சில மீக நீளமானவை என்று கருதப் படுகின்றன.