வாசுதேவன்
அக்டோபர் 3, 1990 ல் கிழக்கு, மேற்கு ஜெர்மனிகள் ஒன்றாக இணைந்தன.
சில மாகணத்தில் பீர் ஒரு அங்கீகரிக்கப்பட்ட உணவு வகை ஆகும். கிட்டத்தட்ட 1500 பீர் வகைகள் இந்த தேசத்தில் உள்ளன. ஐரோப்பாவில் பீர் குடிப்பவர்கள் அதிக எண்ணிக்கையில் இரண்டாவது இடத்தில் இருப்பது ஜெர்மனி. ஜெர்மனியில் ஒரு பீர் வேண்டுமானால் கட்டை விரல் மற்றும் 2 பீர் வேண்டுமானால் ஆள் காட்டி விரலையும் காட்டுவார்கள்.
இங்கு ஒரு இனிப்பு வகைகள் தயாரிக்கும் நிறுவனத்தில் சிறுவர், சிறுமியர் சோளம் கொடுத்தால் அவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்படும். அப்படி சேகரிக்கும் சோளத்தை மாடுகளுக்கு தீவனமாக அனுப்பி விடுவார்கள்.
இரண்டாம் உலக போரின் பொழுது கோகோ கோலா இறக்குமதி தடை செய்யப்பட்ட சமயத்தில் ஜெர்மனியில் உருவாக்கப்பட்ட பானம்தான் பான்டா (Fanta) .
இந்த தேசத்தில் ஆயிரக் கணக்கான அரண்மனைகள் உள்ளன(Castles). தலை நகரம் பெர்லின் பாரீஸ்சைவிட 9 மடங்கு பெரியது.
ஐரோப்பாவின் மிக பெரிய ரயில் நிலையத்தை பெர்லினில் கண்டு களிக்கலாம். கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு காடுகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தேசம் ஜெர்மனி ஆகும்.
இங்கு மிகவும் விரும்பி ஆடப்படும் ஆட்டம் கால்பந்து. உலகில் இந்த தேசத்தில் தான் அதிக எண்ணிக்கையிலான கால்பந்து விளையாடும் கிளப்புகள் உள்ளன. ஜெர்மனி கால்பந்து ஆட்டத்தில் உலக கோப்பையை 4 முறைகள் வென்றுள்ளது.
65% நெடுஞ்சாலைகளில் வண்டிகளுக்கு வேக கட்டுப்பாடு கிடையாது. அவைகள் அதிவேகமாக பறந்த வண்ணம் இருக்கும்.
அதிக அளவில் கார்கள் தயாரிக்கும் ஜெர்மனியில் வருடந்தோறும் 5 மில்லியனுக்கும் அதிகமான கார்கள் விற்பனை செய்யப் படுகின்றன.
இந்த நாட்டில் கிட்ட தட்ட 400 மிருக காட்சி சாலைகள் உள்ளன.
இங்கு தான் முதல் பத்திரிகை (Magazine) 1663ல் தொடங்கி அறிமுகப்படுத்தப் பட்டது.
சில இடங்களில் வளர்க்கப்படும் நாய்களின் இனம், உருவம் இவற்றைப் பொறுத்து தனியாக 'நாய் வரி' (Dog Tax) செலுத்த வேண்டும்.
ஜெர்மனியில் உள்ள கோலாக்னே (Cologne) நகரத்தில் சாக்குலேட்டுக்களுக்காகவே தனி அருங்காட்சியகம் (Museum for chocolate) உள்ளது.
இந்த நகரத்தில் வீடுகளின் வாயிலில் உள்ள இலக்கங்கள் 4 எண்கள் கொண்டவை. (4 digit door numbers).