நிஜமாகவே இது நம்ம பூமிதானா? வேறொரு கிரகத்திற்கு சென்ற உணர்வைத் தரும் டாப் 10 இடங்கள்!

நான்சி மலர்

பூமியிலேயே இருந்து கொண்டு வேற்றுகிரக அனுபவத்தைப் பெற, பயணிகள் பயணம் செல்லக்கூடிய (Possible to Travel) 10 இடங்களின் பட்டியல் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

Alien look alike places in the world

இந்தியாவில் உள்ள லாமாயுரு, லடாக்கை 'நிலவு தேசம்' என்றே அழைக்கிறார்கள். இதன் மண் அமைப்பு, பள்ளங்கள் நிலவின் மேற்பரப்பை அப்படியே பிரதிபலிக்கும்.

Lamayuru ladakh

அடகாமா பாலைவனம், சிலி பார்ப்பதற்கு செவ்வாய் கிரகத்தின் நகல் போல் இருக்கும். நாசா (NASA) தனது செவ்வாய் கிரக ரோவர்களை இங்கேதான் சோதனை செய்கிறது.

Atacama desert

சோகோட்ரா தீவில் உள்ள Dragon Blood Tree மரங்கள் குடை கவிழ்ந்தது போன்ற விசித்திரமான வடிவம் கொண்டவை. இது ஒரு ஏலியன் கிரகத்தின் காடு போலவே இருக்கும்.

Dallol ethiopia

டல்லோல், எத்தியோப்பியாவில் உள்ள நிலப்பரப்பு மஞ்சள், பச்சை மற்றும் சிவப்பு நிறங்களில் அமிலக் குளங்களாகவும், உப்புப் படிவங்களாகவும் காட்சியளிப்பது பார்ப்பதற்கு வியாழன் கோளின் நிலவான 'அயோ' போன்றே இருக்கும்.

Dallol ethiopia

சலார் டி உயூனி, பொலிவியா இது உலகின் மிகப்பெரிய உப்பு சமவெளி. மழைக்காலத்தில் இது ஒரு மாபெரும் கண்ணாடியாக மாறி மாயாஜாலத் தோற்றத்தைத் தரும்.

Salar de uyuni

Wadi Rum, Jordan சிவப்பு மணல் மற்றும் ராட்சத பாறைகள் நிறைந்த இடமாகும். இப்பகுதி அப்படியே செவ்வாய் கிரகத்தை நினைவூட்டும். The Martian போன்ற ஹாலிவுட் படங்கள் இங்கு படமாக்கப்பட்டன.

Wadi Rum, Jordan

Waitomo Glowworm Caves இந்தக் குகைகளின் கூரையில் ஆயிரக்கணக்கான புழுக்கள் நீல நிற ஒளியை உமிழும். குகைக்குள் படகில் செல்லும்போது விண்வெளியில் நட்சத்திரங்களுக்கு நடுவே மிதப்பது போன்ற உணர்வு ஏற்படும்.

Waitomo Glowworm Caves

Zhangye Danxia, China இங்குள்ள மலைகள் வானவில்லின் நிறங்களில் காட்சியளிக்கும். பல மில்லியன் ஆண்டுகளாக மணற்பாறைகள் மற்றும் தாதுக்கள் படிந்ததால் உருவானது இந்த வானவில் மலைகள்.

Zhangye Danxia, China

Dead Vlei, Namibia இப்பகுதி பார்ப்பதற்கு ஒரு விசித்திரமான ஓவியம் போலவும், உயிரற்ற வேறொரு கிரகம் போலவும் இருக்கும்.

Dead Vlei, Namibia | Credits: JAYNE MCLEAN PHOTOGRAPHY

Fly Geyser in Nevada இது மனிதர்களால் உருவாக்கப்பட்ட ஒரு நீரூற்று. பச்சை மற்றும் சிவப்பு நிறத்தில் ஒரு ஏலியன் விண்கலம் போலக் காட்சியளிக்கும்.

Fly Geyser in Nevada | Credits: My Modern Met

Mount Roraima மேகங்களுக்கு மேலே உயர்ந்து நிற்கும் இந்த மலை, ஒரு தனி உலகமாகவே கருதப்படுகிறது.

Mount Roraima | Credits: Vocal media

Blue Lagoon, Iceland வெள்ளை நிறக் களிமண் மற்றும் வெளிர் நீல நிற வெந்நீர் நிறைந்த இந்தப் பகுதிஆவி பறக்கக் காட்சியளிக்கும்.

Blue Lagoon, Iceland | Credits: Earth to sarah
Healthy drinks for summer
கடையில விற்கிற குளிர்பானத்தை ஒதுக்கிடுங்க! வீட்டிலேயே செய்யுங்க இந்த மேஜிக் டிரிங்க்ஸ்!