கடையில விற்கிற குளிர்பானத்தை ஒதுக்கிடுங்க! வீட்டிலேயே செய்யுங்க இந்த மேஜிக் டிரிங்க்ஸ்!

நான்சி மலர்

தமிழகத்தின் கோடை வெயிலைச் சமாளிக்கவும், உடல் ஆரோக்கியத்தைப் மேம்படுத்தவும் உதவும் சிறந்த 10 இயற்கை பானங்கள் (Healthy drinks) பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

Healthy drinks

பானகம் வெல்லம், ஏலக்காய், சுக்கு மற்றும் எலுமிச்சை சாறு கலந்து தயாரிக்கப்படும் இயற்கை குளிர்பானம். இதிலுள்ள சுக்கு மற்றும் மிளகு செரிமானத்திற்கு உதவும், வெல்லம் ஆற்றலை வழங்குகிறது.

Panagam

இளநீரில் பொட்டாசியம், மெக்னீசியம் அதிகம் உள்ளன. இது உடலில் ஏற்படும் நீர்ச்சத்துக் குறைபாட்டை சரிசெய்து உடலைக் குளிர்ச்சியாக வைக்கும்.

Coconut water

தயிருடன் அதிக நீர், இஞ்சி, பச்சை மிளகாய், கருவேப்பிலை, பெருங்காயம், உப்பு சேர்த்து அருந்துவது செரிமானத்தை சீராக்குவதுடன் குடலுக்குக் குளிர்ச்சியைத் தரும்.

Neer moor

நொதிக்க வைக்கப்பட்ட கம்மங்கூழ், கோடை வெப்பத்தால் ஏற்படும் உடல் சோர்வை நீக்கி அதிகாலை ஏற்ற சிறந்த உணவாகவும் அமைகிறது.

Kaman koozh

வில்வ பழத்தின் உட்பகுதியை எடுத்து தண்ணீர், நாட்டுச் சர்க்கரை சேர்த்து குடிக்கலாம். இது குடல் ஆரோக்கியத்திற்கும், வெப்பத்தைத் தணிப்பதற்கும் மிகவும் நல்லது.

Vilva juice

தர்பூசணியில் 92% நீர்ச்சத்து உள்ளது. கோடையில் ஏற்படும் தாகத்தைத் தணிக்க இது ஒரு சிறந்த தேர்வு.

Watermelon juice

பனை மரத்திலிருந்து கிடைக்கும் பதநீர் உடலின் சூட்டைத் தணித்து, இரும்புச் சத்து குறைபாட்டைப் போக்க உதவுகிறது.

Pathaneer

நுங்குத் துண்டுகளை நன்னாரி சர்பத் அல்லது பாலுடன் கலந்து குடிப்பது கோடை வெயிலுக்கு இதமாக இருக்கும்.

Nannari sharbat

எலுமிச்சை புதினா சாறு புத்துணர்ச்சி அளித்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு வாய்த் துர்நாற்றத்தையும் போக்கும்.

Lemon pudina juice

நன்னாரி வேரில் இருந்து தயாரிக்கப்படும் நன்னாரி சர்பத் குடிப்பதால், உடல் சூடு மற்றும் சிறுநீரக எரிச்சல் குறையும்.

Nannari sharbat

ராகி கூழ் மோர் கலந்து குடிக்கும்போது சிறந்த 'ப்ரோபயாடிக்' பானமாகச் செயல்படுகிறது.

Ragi koozh
Solo travel benefits
நண்பர்கள் வரவில்லையா? No Worries! தனியாக செல்வதில் இருக்கும் கெத்தே தனி தான்!