ஆர்.பிரசன்னா
Words
1. சர்க்கஸ்: 'சர்க்குலஸ்' (Circulus) என்ற லத்தீன் சொல்லிலிருந்து வந்தது; இதன் பொருள் 'சிறிய வளையம்'.
2. யூனிஃபார்ம்: 'யூனிஃபார்மிஸ்' (Uniformis) என்ற லத்தீன் வார்த்தையிலிருந்து உருவானது; பொருள் 'ஒரே வடிவம்'.
3. டைரி: 'டயாரியம்' (Diarium) என்ற லத்தீன் சொல்லிலிருந்து வந்தது; இதன் பொருள் 'ஒரு நாளுக்கான ஒதுக்கீடு' அல்லது 'நாட்குறிப்பு'.
4. சினிமா: லூமியர் சகோதரர்கள் உருவாக்கிய 'சினிமட்டோகிராஃப்' என்பதன் சுருக்கமே சினிமா.
5. க்ளாக்: இடைக்கால லத்தீன் வார்த்தையான 'க்ளோக்கா' (Clocca) என்பதிலிருந்து வந்தது; இதன் நேரடி அர்த்தம் 'மணி' (Bell).
6. ஆஃபீஸ்: 'ஆஃபிசியம்' (Officium) என்ற லத்தீன் வார்த்தையிலிருந்து உருவானது; பொருள் 'கடமை' அல்லது 'சேவை'.
7. பிஸ்கட்: 'பெஸ்கட்' (Bescuit) என்ற பிரெஞ்சு சொல்லிலிருந்து வந்தது; இதற்கு 'இரண்டு முறை சுடப்பட்டது' என்று பொருள்.
8. கூகுள்: 1-க்குப் பின் 100 பூஜ்ஜியங்கள் கொண்ட எண்ணைக் குறிக்கும் 'கூகுல்' (Googol) என்ற கணிதப் பதத்திலிருந்து உருவானது.
9. ஒலிம்பிக்ஸ்: போட்டிகள் முதன்முதலில் நடைபெற்ற பண்டைய கிரேக்க ஊரான 'ஒலிம்பியா' (Olympia) என்ற பெயரால் வந்தது.
10. அபார்ட்மெண்ட்: 'அபார்ட்டிமெண்டோ' (Appartamento) என்ற இத்தாலிய சொல்லிலிருந்து வந்தது; இதன் உண்மையான பொருள் 'தனிமைப்படுத்தப்பட்ட இடம்'.