ஆர்.பிரசன்னா
1. இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது - அது என்ன?
2. காதைத் திருகினால் பாட்டு பாடுவான் - அவன் யார்?
3. அழகான பெண்ணுக்கு அதிசயமான வியாதி, பாதிநாள் குறைவாள், பாதிநாள் வளர்வாள் - அவள் யார்?
4. நடந்தவன் நின்றான் கத்தியை எடுத்து தலையைச் சீவினேன் மறுபடியும் நடந்தான் - அவன் யார்?
5. உச்சாணிக் கொம்பில் இருப்பிடம். தாகம் தீர்ப்பதில் தனியிடம் அது என்ன?
6. பேசாத வரை நான் இருப்பேன். பேசினால் நான் உடைந்து விடுவேன் - நான் யார்?
7. ஆற்றைக் கடக்கும்; அக்கரை போகும்; தண்ணீரில் கலக்காது; தானும் நனையாது - அது என்ன?
8. எப்போதும் தரையில் இருக்கும், ஆனால் ஒருபோதும் அழுக்காகாது.. அது என்ன?
9. கந்தல் துணி கட்டியவன் முத்துப் பிள்ளைகளைப் பெற்று மகிழ்ந்தான் - அவன் யார்?
10. படுத்துத் தூங்கினால் கண் முன் ஆடும்; அடுத்து விழித்தால் மறைந்தே ஓடும். அது என்ன?
11. பூவோடு பிறந்து; நாவோடு கலந்து; விருந்தாவான்; மருந்தாவான் - அவன் யார்?
12. இரட்டைப் பிறவிகள் ஒருத்தி கீழே வந்தால் ஒருத்தி மேலே போவாள் - அவர்கள் யார்?
விடைகள்:
1. பட்டாசு, 2. ரேடியோ, 3. நிலா, 4. பென்சில், 5. இளநீர், 6. அமைதி, 7. பாலம், 8. நிழல், 9. சோளக்கதிர், 10. கனவு, 11. தேன், 12. தராசு.