ஆர்.பிரசன்னா
1. ஒற்றைக்கால் குள்ளனுக்கு தலைக்கனம் அதிகம் – அவன் யார்?
2. வெளுத்த அழகி மஞ்சள் புடவை கட்டியிருக்கிறாள் – அவள் யார்?
3. உயரப் பறக்கும், ஆனால் ஊரைச் சுற்றிக் கொண்டு பறக்காது – அது என்ன?
4. விறகெரியத் துணையாகும், விளக்கெரியப் பகையாகும் - அது என்ன?
5. உச்சியின் ஊடே சிக்கல் தீர்ப்பான், சிக்கிக் கொண்டால் பல்லை இழிப்பான் - அவன் யார்?
6. விருந்துக்கு அழைத்து விதியை முடிப்பவன் - அவன் யார்?
7. உடலுக்குள் உருவாகும் உருவமில்லா கல் - அது என்ன கல்?
8. தங்கை விளக்கு காட்ட, அண்ணன் மத்தளம் கொட்ட, அம்மா தண்ணீர் தெளிக்கிறாள் - அவர்கள் யார்?
9. கரை உண்டு; படிக்கட்டு இல்லை. தலைப்பு உண்டு; கட்டுரை இல்லை - அது என்ன?
10. அந்தரமான குகையிலே, சுந்தரமானவள் ஆடுகிறாள் - அவள் யார்?
11. உப்பை உண்டவன் உறக்கமின்றி அலைகிறான் - அவன் யார்?
12. தான் இருந்தால் பிறரை இருக்க விட மாட்டான் - அவன் யார்?
13. கசக்கிப் பிழிந்தாலும் கடைசிவரை இனிப்பான் - அவன் யார்?
விடைகள்:
1. பம்பரம், 2. வாழைப்பழம், 3. கொடி, 4. காற்று, 5. சீப்பு,
6. எலிப்பொறி, 7. விக்கல், 8. மின்னல், இடி, மழை, 9. வேட்டி
10. நாக்கு, 11. கடல், 12. ஓட்டை, 13. கரும்பு