நம்ம டெய்லி யூஸ் பண்ற வார்த்தைக்குப் பின்னாடி இவ்வளவு வரலாறா?

ஆர்.பிரசன்னா

சர்க்கஸ்: 

சர்க்கஸ் எனும் சொல் 'சர்க்குலஸ்' எனும் இலத்தீன் மொழிச் சொல்லிலிருந்து வந்தது‌. 'சர்க்குலஸ்' என்றால் இலத்தீன் மொழியில் 'சிறிய வளையம்' என்று பொருள்.

வார்த்தை | Circus | Image credit: Gemini AI

யூனிஃபார்ம்:

'யூனிஃபார்ம்' (Uniform) என்ற சொல் லத்தீன் வார்த்தையான 'யூனிஃபார்மிஸ்' (Uniformis) என்பதிலிருந்து வந்தது. இதற்கு 'ஒரே வடிவம்' என்று பொருள்.

வார்த்தை | Uniform | Image credit: Gemini AI

டைரி:

டைரி' (Diary) என்ற சொல் 'டயாரியம்' (Diarium) என்ற லத்தீன் வார்த்தையிலிருந்து வந்தது. இதற்கு 'ஒரு நாளுக்கான ஒதுக்கீடு' அல்லது 'நாட்குறிப்பு' என்று பொருள்.

வார்த்தை | Diary | Image credit: Gemini AI

சினிமா:

'சினிமா' என்ற சொல் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த லூமியர் சகோதரர்கள் (Lumière brothers) கண்டுபிடித்த 'சினிமட்டோகிராஃப்' (Cinematograph) என்ற கிரேக்க சொல்லில் இருந்தே 'சினிமா' என்ற பெயர் சுருக்கமாக வந்தது.

வார்த்தை | Cinema | Image credit: Gemini AI

க்ளாக்: 

'கடிகாரம்' என்ற பொருள் தரும் ஆங்கில வார்த்தையான 'Clock' இடைக்கால லத்தீன் மொழியின் 'Clocca' என்ற வார்த்தையிலிருந்து வந்தது. இதன் நேரடி அர்த்தம் 'மணி' (Bell) என்பதாகும்.

வார்த்தை | Clock | Image credit: Gemini AI

ஆஃபீஸ்:

ஆஃபீஸ்' (Office) என்ற சொல், லத்தீன் மொழி வார்த்தையான 'ஆஃபிசியம்' (Officium) என்பதிலிருந்து உருவானது. இதற்கு 'கடமை' (Duty) அல்லது 'சேவை' (Service) என்று பொருள்.

வார்த்தை | Office | Image credit: Gemini AI

கேக்: 

கேக்' (Cake) என்ற சொல், பழைய வட ஐரோப்பிய மொழியான 'நார்டிக்' வார்த்தையான 'காக்கா' (Kaka) என்பதிலிருந்து வந்தது. 1300-களில், சமைத்த மாவின் சிறிய உருண்டைகளை 'காக்கா' என்று அழைத்தனர். இதுவே நாளடைவில் மருவி கேக் ஆகி விட்டது.

வார்த்தை | Cake | Image credit: Gemini AI

பிளேன்:

பிளேன்' (plane) என்ற சொல் பிரெஞ்சு மொழி வார்த்தையான 'பிளானர்' (planer) என்பதிலிருந்து உருவானது. இதற்கு 'காற்றில் மிதப்பது' அல்லது 'வழுக்குவது' என்று பொருள்.

வார்த்தை | plane | Image credit: Gemini AI

பிஸ்கட்:

'பிஸ்கட்' என்ற சொல் பிரெஞ்சு வார்த்தையான 'பெஸ்கட்' (bescuit) என்பதிலிருந்து உருவானது. இதற்கு 'இரண்டு முறை சமைக்கப்பட்டது (அ) சுடப்பட்டது' என்று பொருள்.

வார்த்தை | Biscuit | Image credit: Gemini AI

லாரி: 

'லாரி' (Lorry) என்ற சொல், 19-ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் ரயில்வே பயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்ட 'lurry' என்ற பழைய ஆங்கில வார்த்தையிலிருந்து உருவானது. இதற்கு 'இழுக்க' அல்லது 'பாரத்தை சுமந்து செல்ல' என்று பொருள்.

வார்த்தை | Lorry | Image credit: Gemini AI

'Googol' என்ற கணித சொல்லில் இருந்து 'Google' என்ற பெயர் உருவானது. கணிதத்தில் 1 என்ற எண்ணிற்குப் பின் 100 பூஜ்ஜியங்கள் வந்தால் அதனை 'Googol' என்று அழைப்பர். இணையத்தின் பிரம்மாண்ட தகவல்களை ஒழுங்குபடுத்துவதே தங்கள் இலக்கு என்பதைக் குறிக்க, இந்த சொல்லைத் தேர்ந்தெடுத்தனர்.

வார்த்தை | Google | Image credit: Gemini AI

ஒலிம்பிக்ஸ்:

பண்டைய கிரேக்கத்தில் உள்ள ஒலிம்பியா (Olympia) என்ற வரலாற்று சிறப்புமிக்க இடத்தின் பெயராலேயே 'ஒலிம்பிக்ஸ்' என்ற பெயர் உருவானது. இங்குதான் முதன்முதலில் ஒலிம்பிக்ஸ் போட்டிகள் நடைபெற்றன.

வார்த்தை | Olympics | Image credit: Gemini AI

வெஜிடபிள்:

வெஜிடபிள்' (Vegetable) என்ற ஆங்கில வார்த்தை, லத்தீன் மொழியின் 'வெஜிடேபிலிஸ்' (vegetabilis) என்ற சொல்லில் இருந்து உருவானது. இதற்கு 'செழித்து வளரும்' என்று அர்த்தம்.

வார்த்தை | Vegetable | Image credit: Gemini AI

அபார்ட்மெண்ட்: 

அபார்ட்மெண்ட்' (Apartment) என்ற சொல் இத்தாலிய வார்த்தையான அபார்ட்டிமெண்டோ (Appartamento) எனும் சொல்லில் இருந்து உருவானது. இதன் உண்மையான அர்த்தம் 'தனிமைப்படுத்தப்பட்ட இடம்' என்பதாகும்.

வார்த்தை | Apartment | Image credit: Gemini AI

டிக்கெட்:

டிக்கெட் (Ticket) என்ற சொல் பழைய பிரெஞ்சு மொழியின் 'எடிகெட்' (Etiquet) என்ற வார்த்தையிலிருந்து உருவானது. அச்சொல்லுக்கு அம்மொழியில் 'சிறு துண்டு' என்று பொருள்.

வார்த்தை | Ticket | Image credit: Gemini AI

ஜீன்ஸ்: 

இத்தாலியின் ஜெனோவா (Genoa) நகரில் 16-ஆம் நூற்றாண்டில் தயாரிக்கப்பட்ட முரட்டுத்தனமான பருத்தித் துணிக்கு 'ஜீன் ஃபுஸ்டியன்' என்று பெயர். அந்தத் துணியின் பெயரே காலப்போக்கில் மருவி 'ஜீன்ஸ்' என்று மாறி விட்டது.

வார்த்தை | Jeans | Image credit: Gemini AI

காஃபி: 

'காஃபி' என்ற சொல் எத்தியோப்பியா நாட்டின் 'கஃபா' (Kaffa) என்ற இடத்தின் பெயரில் இருந்து உருவானது. காபி செடிகள் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட எத்தியோப்பியா நாட்டின் 'கஃபா' என்ற இடத்தின் பெயரே இதன் தொடக்கமாகும்.

வார்த்தை | Coffee | Image credit: Gemini AI
APJ Abdul Kalam
<strong>அக்னி சிறகுகள் நாயகன் அப்துல் கலாம்! வியக்க வைக்கும் 10 தகவல்கள்!</strong>