விண்வெளி நிலையத்திற்கு ஒரு பீட்சா!

நான்சி மலர்

பீட்சா (Pizza) பற்றிய மிகவும் ஆச்சரியமளிக்கும் சுவாரஸ்யமான 10 தகவல்கள்.

Pizza interesting facts

1/10. இத்தாலியின் நேப்பிள்ஸ் நகரில் வாழ்ந்த ஏழை உழைப்பாளர்கள்தான் முதன்முதலில் பீட்சாவை சாப்பிடத் தொடங்கினர். மலிவான விலையில், வேகமாகச் சமைத்துச் சாப்பிடக்கூடிய ஒரு உணவாகவே இது உருவானது.

Pizza interesting facts

2/10. 1889-ஆம் ஆண்டில் இத்தாலிய அரசி மார்கரிட்டா நேப்பிள்ஸ் நகருக்கு வந்தபோது, அவருக்கு ஒரு சிறப்பு பீட்சா வழங்கப்பட்டது. இதுவே உலகப்புகழ் பெற்ற 'Margherita Pizza' ஆக மாறியது.

Pizza interesting facts

3/10.இரண்டாம் உலகப்போருக்குப் பிறகுதான் பீட்சா உலகம் முழுவதும் பிரபலமடைந்தது.

Pizza interesting facts

4/10. 2001-ஆம் ஆண்டில் 'Pizza Hut' நிறுவனம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (International Space Station) ஒரு பீட்சாவை டெலிவரி செய்தது.

Pizza interesting facts

5/10. உலகின் மிகப்பெரிய பீட்சா 2023-இல் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தயாரிக்கப்பட்டது. அதன் பரப்பளவு சுமார் 14,000 சதுர அடிகள்.

Pizza interesting facts

6/10. 1962-இல் கனடாவைச் சேர்ந்த சாம் பனோபௌலோஸ் என்ற சமையல் கலைஞர் தான் முதன்முதலில் பீட்சாவின் மீது அன்னாசிப்பழம் வைக்கும் விசித்திரமான 'ஹவாய் பீட்சா' உருவாக்கினார்.

Pizza interesting facts

7/10. உலகின் முதல் பீட்சா கடையான 'Antica Pizzeria Port'Alba', 1738-இல் இத்தாலியின் நேப்பிள்ஸ் நகரில் ஒரு திறந்தவெளி கடையாகத் தொடங்கப்பட்டது.

Pizza interesting facts | credit tripadvisor

8/10. இணைய உலகின் வரலாற்றில், ஆன்லைன் மூலம் முதன்முதலில் வாங்கப்பட்ட பொருட்களில் பீட்சாவும் ஒன்று.

Pizza interesting facts

9/10. ஒவ்வொரு ஆண்டும் 'சூப்பர் பவுல்' (Super Bowl) எனப்படும் புகழ்பெற்ற அமெரிக்கன் கால்பந்து இறுதிப் போட்டி நடக்கும் நாளன்றுதான் உலகிலேயே மிக அதிக அளவில் பீட்சாக்கள் ஆர்டர் செய்யப்படுகின்றன.

Pizza interesting facts

10/10. பாரம்பரிய இத்தாலிய பீட்சாக்கள் விறகு அடுப்பில் 450°C-க்கும் அதிகமான வெப்பத்தில் வெறும் 90 நொடிகளில் சமைக்கப்படும்போது அதன் ஓரங்களில் கருகிய கரும்புள்ளிகள் தோன்றும். இதை 'சிறுத்தை புள்ளிகள்' என்று அழைப்பார்கள்.

Pizza interesting facts
Pigeon
கூகுள் மேப்லாம் ஓரம்போ! புறாக்களின் உடம்புக்குள்ளேயே இருக்கும் அசத்தல் ஜி.பி.எஸ் ரகசியம்!