விளையாட்டுகளின் பெயர்க் காரணங்கள்: சில சுவாரஸ்யமான தகவல்கள்!

ஆர்.பிரசன்னா

பேட்மிண்டன் (Badminton): இந்தியாவில் விளையாடப்பட்ட 'பூனா' ஆட்டம், இங்கிலாந்தின் 'பேட்மிண்டன் ஹவுஸ்' எஸ்டேட்டில் விளையாடப்பட்டதால், அந்த இடத்தின் பெயரிலேயே உலகப்புகழ் பெற்ற விளையாட்டாக நிலைத்துவிட்டது.

Badminton | AI Image

பில்லியர்ட்ஸ் (Billiards): இப்பெயர் பிரெஞ்சு வார்த்தையான 'Billart' எனும் சொல்லில் இருந்து உருவானது. பிரெஞ்சு மொழியில் இதற்கு "பந்தை அடிக்கும் குச்சி" என்று அர்த்தம்.

Billiards | AI Image

கேரம் (Carrom): கேரம் விளையாட்டிற்கு இப்பெயர் எப்படி வந்தது தெரியுமா? பிரெஞ்சு மொழியில் 'கேரம்' என்றால் 'அடித்து தள்ளச் செய்தல்' என்று அர்த்தமாம். அதன் காரணமாகவே இப்பெயர் ஏற்பட்டது.

Carrom | AI Image

தேர், குதிரை, யானை, வீரர்கள் (Chariot, Horse, Elephant, SoldierS) ஆகிய நான்கு படைகளின் ஆங்கில முதல் எழுத்துக்களைக் கோர்த்து 'CHESS' என்ற பெயர் உருவானது.

Chess | AI Image

கோல்ஃப் (Golf): இப்பெயர் நெதர்லாந்தின் பழமையான 'Kolf' (அல்லது Kolve) என்ற வார்த்தையிலிருந்து உருவானது. அதன் பொருள் 'மட்டை' அல்லது 'கம்பு' என்பதாகும்.

Golf | AI Image

ஹாக்கி (Hockey): பிரெஞ்சு மொழியில் 'Hoquet' என்றால் ஆடு மேய்ப்பவரின் கோல் என்று பொருள். அந்த வளைந்த தடியைப் போலவே ஹாக்கி மட்டை இருப்பதால் இப்பெயர் உருவானது.

Hockey | AI Image

கபடி (Kabaddi): 'கபடி' என்ற சொல், எதிரணியினரைத் தொட்டுப் பிடிப்பதைக் குறிக்கும் தமிழ் வார்த்தையான 'கை-பிடி' என்பதிலிருந்து மருவி வந்ததாகும்.

Kabaddi | AI Image

போலோ (Polo): இதன் பெயர் திபெத்திய வார்த்தையான 'Pulu' என்பதிலிருந்து வந்தது. இதன் பொருள் 'பந்து' (Ball) என்பதாகும். பண்டைய காலத்தில் மத்திய ஆசியாவில் குதிரை மீது அமர்ந்து விளையாடப்பட்ட இந்த விளையாட்டுக்கு இப்பெயர் சூட்டப்பட்டது.

Polo | AI Image

டென்னிஸ் (Tennis): இப்பெயர் பிரெஞ்சு வார்த்தையான 'Tenez' என்பதிலிருந்து வந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. பிரெஞ்சு மொழியில் 'டெனெஸ்' என்றால் 'எடுத்துக்கொள்' அல்லது 'தயாராக இரு' என்று பொருள்படும்.

Tennis | AI Image

வாலிபால் (Volleyball): 'வாலி' (Volley) எனும் ஆங்கிலச் சொல்லுக்கு 'மாறி மாறி அடித்தல்' என்று பொருள். இரண்டு பக்கங்களிலும் உள்ள ஆட்டக்காரர்கள் பந்தை நிலத்தில் விடாமல் மாறி மாறி அடித்து விளையாடுவதால் இதற்கு 'வாலிபால்' என்று பெயர் ஏற்பட்டது.

Volleyball | AI Image
10 quotes of Sachin Tendulkar
தோல்வி பயம் உங்களை வாட்டுகிறதா? சச்சினின் டெண்டுல்கரின் இந்த 'மாஸ்டர் பிளான்' உங்கள் வாழ்க்கையை மாற்றிவிடும்!