‘பஞ்சவர்ண குரங்கு’கள் பற்றி அறிவோமா குட்டீஸ்?

மணிமேகலை பெரியசாமி

செங்கால் குரங்குகள் அவற்றின் உடலில் உள்ள பலவிதமான நிறங்களுக்காகவே 'பஞ்சவர்ண குரங்குகள்' என்று அழைக்கப்படுகின்றன.

Red-shanked Douc Langur | Img credit: AI Image

இதன் முகம் வெளிர் மஞ்சள் நிறத்தில் இருக்கும். கண்களைச் சுற்றி ஒரு அழகான மேக்கப் போட்டது போன்ற தோற்றம் காணப்படுவது இதன் சிறப்பு.

Red-shanked Douc Langur | Img credit: AI Image

இவை தென்கிழக்கு ஆசிய நாடுகளான வியட்நாம், லாவோஸ் மற்றும் கம்போடியா ஆகிய நாடுகளின் அடர்ந்த காடுகளில் மட்டுமே வாழ்கின்றன.

Red-shanked Douc Langur | Img credit: AI Image

இவை மிகவும் சமூக உணர்வு கொண்டவை. பொதுவாக 4 முதல் 15 குரங்குகள் கொண்ட குழுவாகவே காடுகளில் சுற்றித் திரியும். ஒவ்வொரு குழுவிலும் ஒரு தலைமை ஆண் இருக்கும்.

Red-shanked Douc Langur | Img credit: AI Image

இவை பெரும்பாலும் இலைகளை மட்டுமே உணவாகக் கொள்கின்றன. அவ்வப்போது பூக்கள், பழங்கள் மற்றும் மொட்டுகளையும் ரசித்து உண்ணும்.

Red-shanked Douc Langur | Img credit: AI Image

இவற்றின் வால் உடலை விட நீளமானது. மரங்களுக்கு இடையே தாவும்போது சமநிலையைப் பேண இந்த வால் பெரிதும் உதவுகிறது.

Red-shanked Douc Langur | Img credit: AI Image

மற்ற குரங்கு இனங்களை விட இவை மிகவும் அமைதியானவை. தனித்துவமான குரல் ஒலி மூலம் குழு உறுப்பினர்களுடன் தொடர்பு கொள்ளும்.

Red-shanked Douc Langur | Img credit: AI Image

இவை பெரும்பாலும் மரங்களில் வாழும் (arboreal) தன்மை கொண்டவை; தரையில் அரிதாகவே இறங்கும்.

Red-shanked Douc Langur | Img credit: AI Image

இவற்றிற்கு உணவைத் தேடும் திறனும், சிக்கல்களைத் தீர்க்கும் திறனும் அதிகம்.

Red-shanked Douc Langur | Img credit: AI Image
Koala-Bear
<strong>க்யூட்டான 'கோலா'க்கள் பற்றி உங்களுக்குத் தெரியாத 10 ரகசியங்கள்!</strong>