நான்சி மலர்
Turkmenistan என்னும் இடத்தில் அமைந்திருக்கும் ஏரியானது எந்நேரமும் எரிந்துக் கொண்டேயிருக்கும். இது கிட்டத்தட்ட 50 வருடங்களாக தொடர்ந்து எரிந்துக் கொண்டேயிருக்கிறது. இதனால் இந்த ஏரியை 'நரகத்தின் நுழைவாயில்' என்று அழைக்கிறார்கள்.
மெக்சிக்கோவில் இருக்கும் ஒரு சிறிய தீவு முழுவதும் தொங்கவிடப்பட்ட பொம்மைகளாக காட்சியளிக்கிறது. இது பார்ப்போரை அச்சுறுத்தும் வண்ணமாக இருப்பதாக மக்கள் கூறுகிறார்கள்.
Death valley என்னும் இடத்தில் இருக்கும் கற்கள் தானாகவே நகர்ந்து செல்லக்கூடிய தன்மையைக் கொண்டதாக இருக்கிறது. கற்கள் நகர்ந்து செல்லும் போது அதன் பின் வழித்தடத்தை உருவாக்கிக் கொண்டே செல்கிறது.
அன்டார்டிகாவில் உள்ள ஒரு நீர்வீழ்ச்சியை 'ரத்த நீர்வீழ்ச்சி' என்று அழைக்கிறார்கள். இரும்பு அதிகமாக இருக்கக்கூடிய உப்பு தண்ணீர் இந்த ரத்தம் போன்ற எஃபெக்டை உருவாக்குகிறது.
அமேசான் காடுகளில் கொதிக்கும் நதிகள் இருக்கின்றன. இது 200 டிகிரி ஃபேரன்ஹீட் அளவிற்கு கொதிக்கக்கூடியது. இந்த நதியின் அருகில் எரிமலைகள் கிடையாது.
Venezuela Maracaibo lakeல் வருடத்திற்கு 150 இரவுகள் ஒரு மணி நேரத்திற்கு 280 தடவை மின்னல் தொடர்ந்து வந்துக் கொண்டேயிருக்கும். இவ்விடத்தை 'Light house of maracaibo' என்று அழைக்கிறார்கள்.
Minnesota ல் உள்ள Devil's kettle என்ற இடத்தில் உள்ள அருவி இரண்டாக பிரிகிறது. இதில் ஒரு பாதி அருவி முழுவதுமாக மறைந்துப்போய் விடுகிறது. இந்த நீர் எங்கே செல்கிறது என்பது ஆராய்ச்சியாளர்களையே குழம்ப செய்கிறது.
Bermuda triangle என்னும் இடத்தில் கப்பல்கள் மற்றும் விமானங்கள் மர்மமான முறையில் மறைந்து போவதாக சொல்லப்படுகிறது. சிலர் இதற்கு காரணம் இங்கிருக்கும் அதிகமான காந்தசக்தி என்கிறார்கள்.
இந்தியாவில் அமைந்துள்ள Magnetic hills என்னும் இடத்தில் கார், பஸ் போன்றவற்றை நிறுத்தும் போது தானாகவே எந்த உந்துதல் சக்தியின்றி நகர்ந்துச் செல்லும் என்று சொல்லப்படுகிறது.
Tanzania வில் உள்ள lake natron ல் விழும் எந்த பறவையையும் மம்மியை போன்று பதப்படுத்திவிடும். இதன் வெப்பம் 104 டிகிரி ஃபேரன்ஹீட் மற்றும் PH level 10.5 இருக்கிறது. இந்த நீரில் இறந்து விழும் வவ்வால், பறவை போன்றவற்றை கற்களாக மாற்றிவிடும்.