இந்திரா கோபாலன்
நீங்கள் பலகாரத்திற்கு மிஷினில் மாவை அரைத்து வந்ததும் அதை நன்றாக நியூஸ் பேப்பரில் போட்டு ஆற வைக்கவும். சூடான மாவை மூடி வைக்க வேண்டாம். (Diwali cooking tips) பலகாரம் சிவந்து விடும்
அதிரசத்திற்கு வீட்டில் அரைப்பதாக இருந்தால் அரிசி ஈரமாக இருக்கும் போது மாவு அரைக்கவும். காய்ந்தால் அதிரசம் வறண்டு வரும். மிருதுவாக இருக்காது.
லட்டுக்கு டைமண்ட் கல்கண்டு சேர்க்க அவை ஈரப்பதத்தை தக்கவைத்து லட்டு வறண்டு போகாமல் இருக்கும்.
வெல்லத்தை தூளாக்கி வைத்துக் கொண்டால் வேலை சுலபமாகும்.
உப்பு பல காரத்திக்கு வெண்ணெய் சேர்த்துப் பிசைய பலகாரம் கரகரப்பாக வரும்.
திபாவளி லேகியத்திற்கான பொருட்களை வாணலியில் வறுத்து ஆறியபின் பொடி செய்து லேகியம் தயாரிக்க சுலபமாக இருக்கும்.
இரண்டு பங்கு பாசிப்பருப்பு ஒருபங்கு கடலைப்பருப்பு என்று அரைத்த மாவில் மைசூர் பாகு தயாரிக்க மிருதுவாகவும் சுவையாகவும் இருக்கும்.
சிப்ஸ் காரா பூந்தி இவற்றுக்கு மிளகாய் பொடிக்கு பதில் மிளகு பொடி சேர்க்க நல்லது.
கடலைமாவு மட்டுமல்லாமல் பாசிப்பருப்பை அரைத்து லட்டு தயாரிக்க சுவையாக இருக்கும்.
தேங்காய் பர்பி செய்யும் போது முக்கால் பதம் வந்தவுடன் கெட்டியான தேங்காய் பால் அரை கப் விட்டு கிளற மிக ருசியாக இருக்கும்.
ரவாகேசரி தயாரிக்கும் போது வெள்ளரி விதைகள் சேர்க்க சுவை கூடும்.
தேன்குழல் தயாரிக்க சாப்பாட்டு அரிசி உபயோகிக்காமல் மாவு அரிசி பயன்படுத்த வெள்ளையாக வரும்.
பஜ்ஜி மாவு தயாரிக்கும் போது கடலை மாவுடன் பொட்டுக்கடலை மாவும் சேர்க்க பஜ்ஜி சுவையாக இருக்கும்.
உளுந்து வடைக்கு இரண்டு டேபிள்ஸ்பூன் பச்சரிசி சேர்த்து ஊறவைக்க வடை மொறு மொறுப்பாக இருக்கும்.