ஆர்.ஜெயலட்சுமி
Bula Chaudhary - India
உலகில் உள்ள ஏழு பெருங்கடல்களை முதன் முதலில் நீந்தி கடந்த பெண்மணி. ஆங்கில கால்வாயை இருமுறை நீந்தி கடந்துள்ளார்.
Isabel-Peron- America
உலக அளவில் முதல் பெண் அதிபராக பதவி வகித்தவர். இவர் அர்ஜென்டினாவின் அதிபராக 1974 ஜூலை 1 முதல் 1976 மார்ச் 24 வரை பதவி வகித்துள்ளார்.
Shanno Devi - India
மாநில சட்டசபையில் சபாநாயகர் பதவி ஏற்ற முதல் இந்திய பெண். ஹரியானாவின் முதல் பெண் சபாநாயகராக பதவி வகித்துள்ளார்.
Kiki Hakansson - Sweden
முதல் உலக அழகி என்று பெயர் பெற்றவர். 1951ல் பிரிட்டனில் நடந்த உலக அழகி போட்டியில் பட்டம் வென்றார். முன்னதாக ஸ்வீடன் நாட்டில் பிரபஞ்ச அழகி போட்டியில் வென்றவர்.
Violet Alva - India
முதல் பெண் ராஜ்யசபா துணைத் தலைவராக பதவி வகித்தவர். 1962 ஏப்ரல் 19 முதல் 1969 நவம்பர் 16 வரை இந்த பதவியை வகித்தார்.
Joong Gotha Bei - Japan
உலகின் உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்தவர். 1975ல் எவரெஸ்ட் ஏறினார். உலகின் உயரமான ஏழு மலைகளிலும் ஏறிய முதல் பெண்மணியும் இவரே.
Valentia Tereshkova - Russia
உலகில் முதன் முதலில் குறைந்த வயதில் விண்வெளி சென்றவர். 1937 இல் பிறந்த இவர் 26 வயதில் 1963 ஜூன் 16ல் வோஸ்டாக் விண்கலம் மூலம் தனி ஒருவராக விண்வெளிக்குச் சென்றார்.
Aarti Gupta Saha - India
ஆங்கில கால்வாயை நீந்தி கடந்த முதல் ஆசிய பெண். மேற்கு வங்காளத்தில் 1940 செப்டம்பர் 24 இல் பிறந்தவர். நான்கு வயதில் இருந்தே நீச்சல் பயிற்சியை தொடங்கி கங்கை ஆற்றில் நீச்சல் பயிற்சி மேற்கொண்டவர்.
Kadambini Ganguly - India
இந்திய நாட்டின் முதல் பெண் மருத்துவர்கள் ஒருவர். பிரிட்டிஷ் இந்தியாவில் மருத்துவம் படித்த முதல் பெண்மணி. பென்சில்வேனியா பெண்கள் மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயின்றார்.
Mary Higgins - America
உலகிலேயே நாவல் எழுதுவதற்காக அதிக முன்பணம் பெற்று சாதனை புரிந்த பெண்மணி. 1988 ஆம் ஆண்டு நாலு நாவல்கள் எழுத இவருக்கு கொடுக்கப்பட்ட முன்பணம் 22 கோடி ரூபாய் !
Maria Bueno - Brazil
1959 ஆம் ஆண்டில் விம்பிள்டன் டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் பந்தயத்தை தன் 19 வயதில் வென்றவர் . எட்டு அடி உயரச் சிலை ஒன்றை நிறுவியும், தபால் தலையை வெளியிட்டும் பிரேசில் நாடு இவருக்கு மரியாதை செய்தது.
K.B.Sundarambal - India
அரசியல் கட்சிக்காக தேர்தல் பிரச்சாரம் செய்த முதல் திரைப்பட கலைஞர். கலைத்துறையில் இருந்து முதன்முறையாக மேலவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட முதல் தமிழ்ப் பெண்மணி.
Martha Washington - America
1886-ல் அமெரிக்க டாலர் நோட்டில் இப்பெண்மணியின் உருவம் பொறிக்கப்பட்டிருந்தது. நாணயத்தில் இடம் பெற்ற முதல் பெண்மணி இவர் .
Gauhar Jaan - India
கிராம போன் இசைத்தட்டில் பாடல்களை பதிவு செய்த முதல் இந்தியர். 20 மொழிகளில் பாடும் வல்லமை பெற்ற இவர், 1902 ஆம் ஆண்டு தனது பாடல்கள் அடங்கிய இசைத்தட்டை வெளியிட்டார்.
Queen Victoria - UK
அஞ்சல் துறை வரிசையில் இடம்பெற்ற முதலாவது பெண்மணி விக்டோரியா மகாராணி. 1882 முதல் 1899 வரை அவரது தபால் தலைகள் உபயோகத்தில் இருந்தன.
Rani Of Jhansi - India
6 மீட்டர் உயர சிலை ஒன்று இப்பெண்மணிக்கு நிறுவப்பட்டுள்ளது. மேலும், அமீப்பூர் மாவட்டத்தில் நிறுத்தப்பட்டுள்ள சிலை இரு கால்கள் ஊன்றி இரு கால்களை உயர்த்தி பறந்து செல்லும் குதிரை மேல் இவர் அமர்ந்து இருப்பது போன்ற அமைப்புள்ளது.
Hatshepsut - Egypt
உலக வரலாற்றிலேயே முதன்முதலாக நாடாண்ட பெண்மணி இவர். இவரது காலம் கி.மு 1501.
Muthulakshmi Reddy - India
தமிழகத்தில் டாக்டர் பட்டம் பெற்ற முதல் பெண் மருத்துவர். சென்னையில் புற்றுநோய் மருத்துவமனை தோன்ற காரணமாய் இருந்தவர். முதன் முதலாக சட்டமன்றத்தில் உறுப்பினரான தமிழ் பெண்மணி. இத்தனை பெருமைக்கும் உரியவர் இவரே.