தீபாவளி சமையல் டென்ஷனா? கவலை விடுங்க, இந்த எளிய வழிகள் உங்களுக்காக!

பத்மப்ரியா

Cooking tips

1. லட்டு பிடிக்கும்போது பாதாம் பவுடர் சிறிது சேர்த்தால், லட்டு பிடிப்பதும் எளிதாக இருக்கும். சுவை, மணம், சத்து கூடும்.

Cooking tips | Gemini image

2. ரவா உருண்டை, பயத்தம் மாவு உருண்டை பண்ணும்போது, கொஞ்சம் மில்க் பவுடரை சேர்த்து, நெய்யை உருக்கிவிட்டுப் பிடித்தால், சுவை அதிகமாக இருக்கும்.

Cooking tips | Gemini image

3. தேங்காய் பர்பி செய்யும்போது, கெட்டியான தேங்காய் பால் சேர்த்தால், பர்பி மிருதுவாகவும், சுவை கூடுதலாகவும் இருக்கும்.

Cooking tips | Gemini image

4. சோமாஸ் செய்யும் போது, பொட்டு கடலையுடன் வறுத்து பொடித்த கசகசா மற்றும் எள் போட்டுக் கொண்டால், நல்ல மணமாக இருக்கும்.

Cooking tips | Gemini image

5. இனிப்புகள் தயாரிக்கும்போது, சர்க்கரைக்கு பதில், வெல்லம் அல்லது தேன் ஏதாவது ஒன்றை பயன்படுத்தினால் சுவை கூடுதலாக இருக்கும்.

Cooking tips | Gemini image

6. பாயசம் நீர்த்துப் போய்விட்டால், பொட்டுக்கடலை மாவை சிறிது கலந்து கிளறினால், பதம் சரியாகி, சுவையும் கூடும்.

Cooking tips | Gemini image

7. கேசரி, பர்பி, பால்கோவா எது செய்தாலும் நான் ஸ்டிக் தவா பயன்படுத்தினால், அடி பிடிக்காது. கிளறுவது எளிது. நெய் செலவும் குறையும்.

Cooking tips | Gemini image

8. பாகு மீந்து விட்டால் அதில் இஞ்சி நறுக்கி நெய்யில் வதக்கி போட்டு சாப்பிடலாம். தீபாவளி பலகாரங்கள் எளிதில் ஜீரணம் ஆகிவிடும். பாகும் வீணாகாது.

Cooking tips | Gemini image

9. குலோப் ஜாமுனுக்கு உருண்டைகளை உருட்டும் போது, கையில் நெய் தடவிக் கொண்டு உருட்டினால் ஒட்டாது; ஜாமுனும் மணக்கும்.

Cooking tips | Gemini image

10. தீபாவளி அன்று மதிய உணவு மோர் குழம்பு மிளகு சீரக ரசம், இஞ்சி துவையல் என்று எளிமையாக இருந்தால் அஜீரணம் மந்தம் பித்தம் எனும் பிரச்சனைகள் வராது.

Cooking tips | Gemini image
Crackers | Gemini image
மழையினால் பட்டாசு வீணாகப் போகுதா? இந்த 10 வித்தைகளைத் தெரிஞ்சா எரியும், தெறிக்கும்!