மழைக்காலக் கவலைகளுக்கு விடை: இந்த 10 சூப்பர் டிப்ஸ் தெரிஞ்சா டென்ஷனே இருக்காது!

பத்மப்ரியா

Rainy season

1. குளிர்காலத்தில் தயிர் கெட்டியாக உறையாது பாலில் மோர் ஊற்றியதும் சிறிது புளியை உருட்டி அதில் போட்டால் போதும். கெட்டியான தயிர் கிடைத்துவிடும்.

Rainy season | Gemini image

2. குளிர்காலத்தில் இட்லி, தோசை மாவு பொங்கி வராது. மாவு கரைத்ததும் வெந்நீர் பாத்திரத்தின் அருகில் வைத்தால் மாவு நன்றாக பொங்கி வரும்.

Rainy season | Gemini image

3. பீரோவில் வைக்கும் துணிகளுக்கிடையே வெள்ளை சாக்பீஸ்களை வைத்தால் துணிகளில் ஈரப்பதம் இருந்தால் அவை உறிஞ்சிக் கொண்டு விடும்.

Rainy season | Gemini image

4. மழைக்காலத்தில், வாசல் மிதியடி ஈரத்தால் சுருங்கிவிடும். எனவே ஈரத்தால் பாதிக்கப்படாத ரப்பர் மிதியடி வாசலிலும், உள்ளே நுழையும்போது பருத்தி மிதியடியையும் போட்டு வைக்கலாம்.

Rainy season | Gemini image

5. மழை காலத்தில் உப்பு ஜாடியில் ஈரம் கசிவதை தவிர்க்க, ஜாடியில் இரண்டு, மூன்று பச்சை மிளகாயை போட்டு வைத்தால் போதும்.

Rainy season | Gemini image

6. மழைக்காலத்தில் மிளகு, சீரகம், ஓமம், இஞ்சி போன்ற பொருட்கள் கலந்த உணவுகளையே சாப்பிட்டு வந்தால், இந்தப் பருவத்தில் வரும் நோய்களிலிருந்து காத்துக் கொள்ளலாம்.

Rainy season | Gemini image

7. மழை நீரைச் சேகரித்து, நன்கு காய்ச்சி ஆற வைத்து, முகத்தைக் கழுவினால் சருமம் மென்மையாக மாறும்.

Rainy season | Gemini image

8. மழைக்காலத்தில் பாய்கள் அல்லது மற்ற துணிப் பொருட்களை சுருட்டி வைக்கும்போது, அவற்றுக்குள் பழைய செய்தித்தாள்களை வைத்து சுருட்டி வைப்பது, பூஞ்சை பிடிப்பதைத் தடுக்கும்.

Rainy season | Gemini image

9. மழைக்காலத்தில் வரும் சேற்றுப் புண்ணுக்கு, மருதாணி அல்லது மஞ்சள் அரைத்து விரல் இடுக்குகளில் தடவி வந்தால் ஆறிவிடும்.

Rainy season | Gemini image

10. மழைக்காலத்தில் ஜில்லென்று இருக்கும் துணிகளை மடித்து, கம்பளியில் சுருட்டி, நான்கு மணி நேரம் கழித்து எடுத்தால், வெயிலில் காய வைத்தது போன்று மொட மொடப்பாக இருக்கும்.

Rainy season | Gemini image
Banana
பளபளக்கும் வாழைப்பழமா? உஷார், அதுல விஷம் இருக்கலாம்!