நடேஷ் கன்னா
சர்க்கரை நோயாளிகள் தினமும் ஐந்து கருவேப்பிலை இலைகளை பச்சையாக மென்று சாப்பிட்டு தண்ணீர் குடித்தால் சர்க்கரை அளவு படிப்படியாக குறையும்.
சுண்டைக்காயை சாப்பாட்டில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.
இரவில் ஏலக்காய் பொடியை பாலில் கலந்து குடித்தால் குறட்டை ஏற்படாது.
காலில் நீர் கோர்த்து கொண்டு வீக்கமாக இருந்தால் முருங்கை இலை வெங்காயம் மஞ்ச படி மூன்றையும் சேர்த்து அரைத்து காலில் தடவினால் வீக்கம் வற்றிவிடும்.
சீதா பழத்தில் விட்டமின் சி 25 சதவீதம் உள்ளது. சீதாப்பழம் இதய வால்வுகளில் உள்ள கொழுப்பை கரைத்து இதயநோய், இரத்த அழுத்தம், ரத்த சோகை போன்ற பிரச்னைகள் ஏற்படாமல் தடுக்கும்.
உடல் எடையை குறைக்க ஓட்ஸ் எடுத்து முந்தின நாள் ஊற வைத்து மறுநாள் காலை அதை அருந்தி வந்தால் உடல் எடை குறையும் ஊளைச் சதை குறையும்.
கால் ஆணி இருந்தால் சிறிய அளவு தேங்காய் எண்ணெயை கொதிக்க வைத்து அதில் நான்கு கற்பூரத்தை பொடி செய்து போட்டு அதை கால் ஆணி இடத்தில் தடவி வந்தால் கால் ஆணி இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.
தூக்கம் வரவில்லை என்றால் சிறிதளவு ஜாதிக்காய் பவுடரை பாலில் கலந்து குடித்தால் நன்றாக தூக்கம் வரும்.
முடக்கத்தான் கீரையை நீர் விட்டு அரைத்து அதை தலையில் தடவினால் முடி கொட்டுவது நின்று விடும். மேலும் நரை முடியும் வராது.
இரவில் தினசரி 2 ஏலக்காயை மென்று சாப்பிட்டு வந்தால் சர்க்கரை அளவு குறையும். ரத்த அழுத்தம் குறையும். நன்றாக தூக்கம் வரும். வாய் துர்நாற்றம் இருக்காது. சிறுநீர் மற்றும் சிறுநீரகத்தில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும்.
உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறைக்க ஐந்து கொய்யா இலை இரண்டு ஏலக்காய் ஒரு ஸ்பூன் டீ தூள் ஒரு ஸ்பூன் நாட்டு சக்கரை இவற்றை கலந்து கொதிக்க வைத்து பின்னர் வடிகட்டி குடித்தால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் கரைந்து விடும்.