ஆரூரில் பிறந்தால் முக்தி! திருவாரூர் கோவில் சிறப்பு!

பொ.பாலாஜிகணேஷ்

திருவாரூர் தியாகராஜர் கோயில் தமிழகத்தின் திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

இக்கோயில் நாயன்மார்களால் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகவும், பஞ்சபூதத் தலங்களில் பிருதிவித் தலம்.

இக்கோவிலில் தான் பசுவிற்கு நீதி வழங்கினார் மனு நீதி சோழன்.

ஆசியாவிலயே மிகப் பெரிய தேர் திருவாரூர் ஆழித்தேர் ஆகும். "ஆழித்தேர் வித்தகனை நான் கண்ட தாரூரே" என்பது அப்பர் தம் வாக்கு.

இந்தக்கோவிலில் மட்டும் தேவாரம் பாடி முடித்ததும், “திருச்சிற்றம்பலம்” என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதில்லை.

தியாகராஜர் கோவிலில் 84 விநாயகர்கள் உள்ளனர். அவர்களுள் மிகவும் பிரசித்தி வாய்ந்த நடுக்கம் தீர்த்த விநாயகரை, நரம்புத்தளர்ச்சி உள்ளவர்கள், டென்ஷனாக இருப்பவர்கள் வழிபடுகிறார்கள்.

திருவாரூரில் தியாகராஜரின் முக தரிசனம் காண்பவர்கள், அங்கிருந்து 3 கி.மீ. தொலைவிலுள்ள விளமல் சிவாலயத்தில் பாத தரிசனம் காண்பது சிறப்பு.

எல்லாத் திருத்தலங்களிலும் சிவபெருமானின் முன்பு நந்தி அமர்ந்திருப்பார். ஆனால் தியாகேசப் பெருமானின் முன்பு இருக்கும் நந்தி நின்ற வண்ணம் காட்சி தருகிறார்.

நவகிரக சன்னதி தென் திசையில் உள்ள தியாகராஜ சுவாமி நோக்கி ஒரே வரிசையில் அமைந்துள்ளது.