கே.எஸ்.கிருஷ்ணவேனி
கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் கடற்கரையை ஒட்டி மேற்கு தொடர்ச்சி மலைகளும் ஒருங்கே அமைய பெற்ற சுற்றுலா ஸ்தலங்கள் சிலவற்றை காணலாம்.
ஆந்திர பிரதேசம் யாரடா:
விசாகப்பட்டினத்தில் இருந்து 15 கிமீ தூரத்தில் உள்ளது. கடற்கரையின் மூன்று பக்கங்களும் மலைகளால் சூழப்பட்ட மிக ரம்யமான இடம். கடற்கரையிலிருந்து மூன்று கிலோமீட்டர் தூரத்தில் டால்பினின் மூக்கை போன்ற குன்று ஒன்றையும் தவறாமல் கண்டு களியுங்கள்.
கோகர்ணா கர்நாடகா:
குன்று ஒன்றின் மீது ஏறி பார்க்க ஒரு முனையில் அரபிக் கடலின் அழகையும்,மறுமுனையில் கோகர்ணா நகரத்தையும் கண்டுகளிக்கலாம். இவ்விடத்தில் அழகிய பீச்சுகளான ஹாஃப் மூன் பீச், ஓம் பீச், குட்லே பீச்கள் உள்ளன.
கணபதி புலே, மகாராஷ்டிரா:
இது கொங்கன் கடற்கரையில் அமைந்துள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் இந்த இடத்தை பார்க்க தவறவிடாதீர்கள்.
வர்க்கலா கேரளா:
திருவனந்தபுரத்திலிருந்து 51 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. இங்கு ஆயுர்வேத புத்துணர்ச்சி மையங்கள் உள்ளன. படகு சவாரி, சூரிய குளியல் என அனுபவிக்க ஏற்ற இடம்.
மங்களூர் பனம்பூர் கடற்கரை:
மிகவும் தூய்மையான கடற்கரை இது. குதிரை மற்றும் ஒட்டக சவாரியை இங்கு அனுபவிக்கலாம். பாராசைலிங், ஜெட் ஸ்கை,ஏடிவி ரைடுகள் என சாகசங்கள் செய்ய ஏற்ற இடம்.
வாகேட்டர் கடற்கரை, கோவா:
கோவாவின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள இடம் இது. மென்மையான வெள்ளை மணல், தென்னை மரங்கள் சூழ அமைந்துள்ள அழகான கடற்கரை.
கனகோனா, கோவா:
இங்கு கடற்கரை பசுமையான மலைகளால் சூழப்பட்டு காணப்படும். கடலை சுற்றி அமைந்த பகுதியில் பனை மரங்களும், மலைகளும், அருவிகளும் நம் கண்ணையும் கருத்தையும் சுண்டி இழுக்கும்.
யானை கடற்கரை(Elephant Beach), அந்தமான்:
(Coral reefs) கோரல் ரீப்ஸ் நிறைந்த கடலும், அழகான வெள்ளை மணல் கொண்ட கடற்கரையும், மலைகளும் சூழ்ந்த இந்த கடற்கரையில் சாகச விளையாட்டுக்கள் பல உண்டு!