நம்ம சென்னை! நம்ம மெட்ரோ!

விஜி

சென்னையில் பலரும் பொது போக்குவரத்தை நம்பியே வாழ்ந்து வருகின்றனர்.

போக்குவரத்து நெரிசலால் பெரும்பாலனோர் தற்போது மெட்ரோ ரயிலில் பயணம் செய்து வருகின்றனர்.

சென்னை மெட்ரோவின் கட்டுமானம் 2009 இல் தொடங்கியது.

சென்னை மெட்ரோவின் ஒவ்வொரு திட்டமும் ஒவ்வொரு வண்ணத்திலான லைனை குறிக்கிறது.

தற்போது, இரண்டு சென்னை மெட்ரோ ரயில் பாதைகள், அதாவது புளூ லைன் மற்றும் கிரீன் லைன் மட்டுமே இயக்கப்படுகின்றன.

பர்பிள் லைன், ரெட் லைன், ஆரஞ்சு லைன் ஆகியவை கட்டப்பட்டு வருகின்றன.

ப்ளு லைன்: மெட்ரோ அமைப்பின் முதல் பிரிவான ப்ளூ லைன் ஜூன் 29, 2015 அன்று திறக்கப்பட்டது. இது தான் விம்கோ நகர் டிப்போ - சென்னை சர்வதேச விமான நிலையம் செல்லக்கூடிய மெட்ரோ ரயில் திட்டமாகும்.

க்ரீன் லைன்: இரண்டாவதாக தொடங்கப்பட்ட இந்த திட்டம் தான் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் - செயின்ட் தாமஸ் மவுண்ட் வரை செல்லக்கூடிய மெட்ரோ ரயில் சேவையாகும்.

Inter Corridor லைன்: இந்த திட்டம் சென்னை சென்ட்ரல் - சென்னை சர்வதேச விமான நிலையம் வரை செல்லக்கூடிய ரயில் சேவை திட்டமாகும்.

Purple லைன்: இந்த திட்டம் மாதவரம் பால் காலனி - சிறுசேரி சிப்காட் 2 வரை செல்லக்கூடிய ரயில் சேவையாகும்.

ஆரஞ்சு லைன்: இந்த திட்டம் கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி பைபாஸ் வரை செல்லக்கூடியதாகும்.

சிவப்பு லைன்: இந்த திட்டம் மாதவரம் பால் காலனி - சோழிங்கநல்லூர் வரை செல்லக்கூடிய ரயில் சேவையாகும்

பணியில் உள்ள திட்டங்கள் இன்னும் 5 ஆண்டுகளில் நிறைவடைந்து விடும் என கூறப்படுகிறது.

உலக கோப்பை கிரிக்கெட் - 1975 முதல் 2019 வரை!