ஸ்ரீநிவாஸ் கேசவன்
1975ல் மேற்கிந்திய தீவு அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்து முதல் உலகக்கோப்பையை வென்றது.
1979ல் தொடர்ந்து இரண்டாவது முறையாக மேற்கிந்திய தீவு அணி, இங்கிலாந்தை 92 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து, கோப்பையை வென்றது.
1983ல் நடப்பு சாம்பியனான மேற்கிந்திய தீவு அணியை 43 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோற்கடித்து கோப்பையை கைப்பற்றியது.
1987-ம் ஆண்டு இங்கிலாந்து அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, ஆஸ்திரேலியா கோப்பையை வென்றது.
1992-ம் ஆண்டு இங்கிலாந்து அணியை 22 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் கோப்பையை வென்றது.
1996ல் கோப்பையை வென்ற இலங்கை அணி, இறுதிப்போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.
1999ல், 8 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி, ஆஸ்திரேலிய அணி கோப்பையை வென்றது.
2003ல் ஆஸ்திரேலிய அணி 125 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி தொடர்ந்து இரண்டாவது முறையாக கோப்பையை வென்றது.
தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆஸ்திரேலிய அணி 2007ல், இலங்கை அணியை 53 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, கோப்பையை வெல்வதில் ஹாட்ரிக்கை பதிவு செய்தது.
2011ல் தோனி தலைமையில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி இரண்டாம் முறையாக கோப்பையை தன் வசம் ஆக்கியது.
2015ல் நியூசிலாந்து அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து மறுபடியும் கோப்பையை கைப்பற்றியது ஆஸ்திரேலியா!
2019ல் வழக்கமான ஆட்டம் மற்றும் சூப்பர் ஓவருக்குப் பிறகு இங்கிலாந்து அணிக்கும் நியூசிலாந்து அணிக்கும் டை ஆனது; பவுண்டரி எண்ணிக்கை அடிப்படையில் இங்கிலாந்திற்கு கோப்பை வழங்கப்பட்டது.