கருணாநிதி முதல் உதயநிதி வரை: திமுக தலைவர்களின் அதிரடி கைதுகள்!

கிரி கணபதி

DMK leaders arrest:

தமிழக அரசியல் வரலாற்றில் திமுக தலைவர்கள் பல்வேறு போராட்டங்களுக்காகவும், வழக்குகளுக்காகவும் கைதாகி சிறை சென்றுள்ளனர். அவற்றின் முக்கிய நிகழ்வுகளைப் பார்ப்போம்.

DMK leaders arrest

கருணாநிதி கைதுகள்!

DMK leaders arrest

1. கல்லக்குடி போராட்டம் (1953): டால்மியாபுரம் பெயரை கல்லக்குடி என மாற்றக் கோரி நடந்த மறியலில் கைதாகி சிறை சென்றார்.

DMK leaders arrest

2. இந்தி எதிர்ப்பு (1957): இந்தித் திணிப்பைக் கண்டித்து நடைபெற்ற அமைதிப் போராட்டத்திற்குத் தலைமை தாங்கியதால் கைதானார்.

DMK leaders arrest

3. குலக்கல்வி எதிர்ப்பு (1953): ராஜாஜியின் திட்டத்தை எதிர்த்து திராவிடர் கழகம் நடத்திய போராட்டத்தை ஆதரித்ததால் அரியலூர் சிறையிலடைக்கப்பட்டார்.

DMK leaders arrest

4. நள்ளிரவு கைது (2001): மேம்பால ஊழல் புகார் என, நள்ளிரவில் வீட்டின் கதவை உடைத்து மு. கருணாநிதி கைதானது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

DMK leaders arrest

மு.க. ஸ்டாலின் கைதுகள்: 

DMK leaders arrest

5. மிசா சட்டம் (1976): நெருக்கடி நிலையை எதிர்த்ததற்காக MISA சட்டத்தின் கீழ் கைதாகி, ஓராண்டு காலம் சிறையில் அடைக்கப்பட்டார். 

DMK leaders arrest

6. 2001 வழக்கு: கருணாநிதி கைதான அதே மேம்பால ஊழல் வழக்கில், மு.க. ஸ்டாலினும் சேர்க்கப்பட்டு நீதிபதியிடம் சரணடைந்தார். 

DMK leaders arrest

7. விவசாயிகள் போராட்டம் (2017): விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்யக் கோரி திருவாரூரில் நடந்த மறியலின்போது கைதானார். 

DMK leaders arrest

8. இது தவிர விலைவாசி உயர்வு, மக்கள் பிரச்னைகளுக்காக நடத்தப்பட்ட பல ஆர்ப்பாட்டங்களில் கைதாகியுள்ளார்.

DMK leaders arrest

இன்று உதயநிதி ஸ்டாலின் கைது!

DMK leaders arrest

9. தஞ்சாவூரில் காவிரி நதிநீர் உரிமைக்காக நேற்று நடைபெற்ற கண்டனக் கூட்டத்தில் உதயநிதி பேசினார். 

DMK leaders arrest

10. முதலமைச்சர் விஜய்யை மோசமாக விமர்சித்தபோது, நடிகை த்ரிஷா பெயர் முழக்கமிடப்பட்டதால் சர்ச்சை எழுந்தது. 

DMK leaders arrest

11. அந்த முழக்கங்களுக்கு அவர் இரட்டை அர்த்தத்தில் பதிலளித்ததாகத் தவெக தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. 

DMK leaders arrest

12. அதிரடி கைது: பலத்த பாதுகாப்போடு நீலாங்கரை இல்லத்தில் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக தஞ்சாவூர் கொண்டு செல்லப்படுகிறார். தன் மீதான குற்றச்சாட்டை அவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

DMK leaders arrest

மக்கள் உரிமைப் போராட்டங்கள் முதல் அரசியல் ரீதியான வழக்குகள் வரை, திமுக தலைவர்கள் பல முறை கைது நடவடிக்கைகளைச் சந்தித்து, சட்டரீதியாக எதிர்கொண்டு வந்துள்ளனர்.

DMK leaders arrest
Apj abdul kalam quote | AI image
கனவு காணுங்கள், உழையுங்கள்: கலாமின் வார்த்தைகள் வெற்றிக்கான சிறகுகள்