கல்கி டெஸ்க்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழுப்புரத்தில் இன்று தேர்தல் பிரச்சாரம். விழுப்புரம் விடுதலை சிறுத்தைகள் வேட்பாளர் ரவி குமார், கடலூர் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத்க்கு வாக்கு சேகரிப்பு.
தமிழ்நாடு அரசு கூறிய 3.6 TMC நீரை தர கர்நாடக அரசு மறுப்பு. தங்களிடம் போதிய நீர் இருப்பு இல்லை என டெல்லியில் நடைபெற்ற காவேரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் வாதம்.
மயிலாடுதுறையில் பதுங்கி உள்ள சிறுத்தையைப் பிடிக்க கூண்டுகள் வலைகள் அமைப்பு. 14 இடங்களில் சென்சார் பொருத்தப்பட்டு கண்காணிக்கப் படுவதாக வனத்துறை தகவல்.
அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் அக்னி-பிரைம் விண்வெளி சோதனை வெற்றி. ஒடிசா கடற்கரையில் உள்ள அப்துல் கலாம் தீவில் இருந்து ஏவப்பட்டதும் இலங்கையில் துல்லியமாகத் தாக்கியது.
மக்களவை தேர்தல் பரப்புரை ரோட் ஷோவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க வருவதையொட்டி ஏப்ரல் 9ஆம் தேதி சென்னையில் ட்ரோன்கள் பறக்க தடை. பனகல் பார்க்கியிலிருந்து பாண்டி பஜார் வழியாக தேனாம்பேட்டை சிக்னல் வரை 2கி. மீ தூரம் ரோட் ஷோ.
மக்களவை தேர்தல் பிரசாரத்திற்காக ஓரிரு நாட்களில் தமிழகம் வருகிறார் பிரியங்கா காந்தி. வருகிற 12ஆம் தேதியன்று ராகுல் காந்தி தமிழகம் வர இருப்பதாகவும் செல்வ பெருந்தகை தகவல்.
காசா போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெடான்யாஹூக்கு ஜோ பைடன் கண்டிப்பு. இஸ்ரேல் எடுக்க போகும் முடிவு இரு நாட்டின் உறவை தீர்மானிக்கும்.
எழுத்து பிழை உள்ளிட்ட சிறிய காரணங்களுக்காக உண்மையான வாக்காளர்களின் வாக்கு அளிக்கும் உரிமை மறுக்கப் பட கூடாது. அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகளுக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்.
நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகத்தில் பொது விடுமுறை அறிவிப்பு. பொது மக்கள் வாக்களிக்க ஏதுவாக பொது விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவு.
இமாச்சல பிரதேசத்தில் 5.3 விக்டர் அளவில் நிலநடுக்கம். சம்பா பகுதியில் உள்ள கட்டிடங்களில் உணரப்பட்ட நில அதிர்வு.
தமிழ்நாட்டில் நேற்று 15 இடங்களில் சதம் அடித்த வெயில். அதிகபட்சமாக ஈரோட்டில் 106.52 ஃப்பேரன் ஹீட் வெப்பம் பதிவு.
நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 17வது லீக் போட்டியில் பஞ்சாப் அணி வெற்றி. 3 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் அணியை வீழ்த்தியது.
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 18வது லீக் போட்டியில் சென்னை, ஹைதராபாத் அணிகள் மோதல். ஹைதராபாத்யில் உள்ள ராஜிவ் காந்தி மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு போட்டி நடைபெறவுள்ளது.
இயக்குநர் லிங்குசாமி பையா-2 திரைப்படம் குறித்து புதிய தகவலை வெளியிட்டுள்ளார். "பையா 2 கதையை தயார் செய்துவிட்டேன். பையா 2இல் வேறு காதலர்கள் உண்டு. அந்த படத்திலும் கார் உண்டு" என்றார்.
வார இறுதி தினத்தை முன்னிட்டு இன்று முதல் ஏப்.7ஆம் தேதி வரை சென்னை மற்றும் பிற இடங்களுக்கு செல்ல 925 சிறப்பு பேருந்துகள் இயக்கம். நாளை சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து 265 பேருந்துகளும், கோயம்பேட்டில் இருந்து 55 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.
கவினின் 'ஸ்டார்' திரைப்படத்தின் 2வது பாடல் இணையத்தில் வெளியாகியுள்ளது. 'வின்டேஜ் லவ்' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் பாடலுக்கு, யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.