சுருக்குப்பை செய்திகள் (14.03.2023)

கல்கி டெஸ்க்

மக்களவை தேர்தலில் பெண்களின் வாக்குகளை கவர 5 வாக்குறுதிகளை அறிவித்தது காங்கிரஸ். காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் எழை பெண்களுக்கு ஆண்டுக்கு தலா 1 லட்சம் வழங்கப்படும் என அக்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அறிவிப்பு.

Mallikarjun Kharge

குற்றவாளி என்று தீர்ப்பு நிறுத்திவைக்கப்பட்டதால் திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினராக பொன்முடி தொடர்வார் என சபாநாயகர் அறிவிப்பு. பொன்முடிக்கு அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைக்குமாறு அளுநருக்கு முதலமைச்சர் கடிதம்.

Ponmudi

தேமுதிகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை தொடருவதாகவும் பாமகவுடன் இதுவரை பேச்சு வார்த்தை நடத்தவில்லை என்றும் நடத்தும்போது தெரிவிக்கப்படும் என்றும் எடப்பாடி பழனிச்சாமி பேட்டி.

Eps

சென்னை வடபழனியில் மழைநீர் வடிகால் கால்வாய்யில் பள்ளம் ஏற்பட்டதால் அதனருகே இருந்த வீடுகளில் விரிசல் ஏற்பட்டு சாய்ந்ததாக புகார்.கீழே விழும் நிலையில் இருந்த கட்டங்களில் வசித்து வந்த மக்கள் வெளியேற்றம்.

House | Image Credit: buildersworld

ஐ சி சி டெஸ்ட் கிரிக்கெட் பந்து வீச்சாளர் வரிசையில் சுழல் வீச்சாளர் அஸ்வின் மீண்டும் முதலிடம். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அஸ்வின் 26 விக்கெட் வீழ்த்தியதை அடுத்து தரவரிசையில் முன்னேற்றம்.

Aswin

அமெரிக்காவின் இரண்டு பல்கலைகழகங்களில் பயில ஸ்காலர்ஷிப் பெற்றார் உச்ச நீதிமன்ற கேன்டீன் சமயல்காரரின் மகள். அமெரிக்காவில் சட்ட மேற்படிப்பை படித்து முடித்துவிட்டு சொந்த நாட்டில் சேவையாற்ற வர வேண்டும் என தலைமை நீதிபதி வாழ்த்து தெரிவித்தார்.

Lawyers | Iamge Credit: barandbench

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகே நலியுற்று வருகிறது ஆயத்த ஆடை தயாரிப்பு தொழில். 300 நிறுவனங்கள் 30தாக சுருங்கிய நிலையில் தொழிலுக்கு புத்துயிர் அளிக்க உற்பத்தியாளர்கள் கோரிக்கை.

Garment

இந்தியாவில் வெளிநாடு இன நாய்கள் விற்பனைக்கு தடை. மத்திய அரசு அதிரடி நடவடிக்கை.

Breed dogs

மக்களவை தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் வியாழன் அல்லது வெள்ளியில் வெளியிடப்படும். காங்கிரசின் தொகுதி பட்டியல் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என செய்தியாளர்களிடம் அமைச்சர் துரைமுருகன் தகவல் தெரிவித்துள்ளார்.

DMK | Image Credit: samayam

paytm fastag வைத்திருக்கும் நபர்கள் வேறு வங்கிக்கு மாற்றி கொள்ளுங்கள். வாடிக்கையாளருக்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவுறுத்தல்.

Paytm, Fastag

இந்தியன் வெல்ஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்வியாடெக் காலிறுதிக்கு தகுதி. முன்னணி வீராங்கனை சபலென்கா அமெரிக்கா வீராங்கனையிடம் அதிர்ச்சி தோல்வி.

Swiatek | Image Credit: kronika24

விஜய்யுடன் மீண்டும் இணையும் திரிஷா!

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் கோட் படத்தில் கேமியோ ரோலில் திரிஷா நடித்துள்ளதாக புதிய அப்டேட் வெளியாகி விஜய் ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது.

Vijay, Trisha
News