சுருக்குப்பை செய்திகள் (14.03.2023)

கல்கி டெஸ்க்

72 தொகுதிக்களுக்கான 2வது கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பாஜக. நாக்பூரில் நிதின் கட்காரியும் , மும்பை வடக்கு தொகுதியில் பியுஷ் கோயலும் போட்டி.

Nitin Gadkari,Piyush Goyal

தமிழ்நாட்டில் புதிய வாகன உற்பத்தி தொழிற்சாலையை 9ஆயிரம் கோடி ரூபாயில் அமைகிறது Tata Motors. முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாக தகவல். 5000 கோடி வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று எதிர்பார்ப்பு.

stalin

மகளிர் பிரீமியர் லீக் 2024: குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி அணி அபார வெற்றி பெற்று நேரடியாக இறுதி போட்டிக்கு தகுதி.

Delhi Capitals

ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமை தொகையை பிச்சை என கூரிய குஷ்பூ மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதை வலியுறுத்தி திமுக மகளிர் அணியினர் இரண்டாவது நாளாக போராட்டம். பூச்சாண்டி வேலை எல்லாம் தன்னிடம் காட்ட வேண்டாம் என்று வீடியோ வெளியிட்டார் குஷ்பூ.

Kushboo

விலை வீழ்ச்சியால் பழனியில் சாலையோரத்தில் கொட்டப்பட்ட தக்காளிகள். கிலோ 10 ரூபாய்க்கும் குறைவாக விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகள் கவலை.

Tomato

நாமக்கல்லில் முட்டை பண்ணை கொள்முதல் விலை மேலும் 20காசுகள் சரிந்து 4ரூபாய் 20 காசுகளாக நிர்ணயம். நுகர்வு குறைந்ததால் கடந்த 4 நாட்களில் மட்டும் 60காசுகள் வரை விலை சரிவு.

eggs

மதுரை சித்திரைத் பெருவிழா ஏப்ரல் 12ஆம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்க உள்ளதாக அறிவிப்பு. ஏப்ரல் 23 ஆம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குகிறார்.

azhagar sammy | Image Credit: pinterest

பெங்களூருவில் தண்ணீர் பற்றாக்குறை அதிகரித்த நிலையில் நீச்சல் குளங்களிலிருந்து தண்ணீரை பயன்படுத்த தடை விதிப்பு. உத்தரவை மீறினால் 5000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என கர்நாடக அரசு எச்சரிக்கை.

Swiiming Pool | Image Credit: Swimming Pool

அர்ஜென்டினாவில் பெய்த கனமழையால் ஏராளமான வீடுகள் சேதம். மழை ஓய்ந்த நிலையில் சீரமைப்பு பணிகளை மேற்கொண்ட மக்கள்.

Argentina Floods

பங்கு சந்தை சரிவால் அதானி குழுமம் பங்குகள் ஒரே நாளில் 90000கோடி இழப்பு. அதிகபட்சமாக அதானி கிரீன் எனர்ஜி பங்குகள் 13சதவீதம் விழ்ச்சி.

Adani

ஆதார் விவரங்களை இலவசமாக புதுபிப்பதற்கான அவகாசம் ஜூன் 16ஆம் தேதி வரை நீட்டிப்பு. இணைய வழியில் மட்டுமே இலவசமாக புதுப்பிக்கலாம் என இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அறிவிப்பு.

Aadhaar

மாநிலம் முழுவதும் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 4000 உதவி பேராசிரியர் பணி இடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கிறது. வரும் 28ஆம் தேதி முதல் ஏப்ரல் 29 ஆம் தேதி வரை பேராசிரியர் பணிகளுக்கான தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். எழுத்து தேர்வு ஆகஸ்ட் 4ஆம் தேதி நடைபெறக்கூடும்.

Written Exam
Image Credit: extermpro