கல்கி டெஸ்க்
தேர்தல் பத்திரங்கள் தொடர்பான தகவல்களை தனது இணையதளத்தில் வெளியிட்டது தேர்தல் ஆணையம். தேர்தல் பத்திரங்கள் வாங்கிய நிறுவனங்கள், கட்சிகள் பெற்ற நிதி குறித்து இரண்டாவது பட்டியல்கள் வெளியீடு.
தேர்தல் பத்திரம் மூலம் அதிகபட்சமாக 6060 கோடி நிதி பெற்று பாஜக முதலிடம், காங்கிரஸ் 1421 கோடியும் , திமுக 639 கோடியும், அதிமுக 6கோடியும் நிதி பெற்றதாக தகவல்.
தேர்தல் பத்திரங்கள் தொடர்பான தகவல்களை தனது இணைய தளத்தில் வெளியிட்டது தேர்தல் ஆணையம். தேர்தல் பத்திரங்கள் வாங்கிய நிறுவனங்கள், கட்சிகள் பெற்ற நிதி குறித்து இரண்டாவது பட்டியல்கள் வெளியீடு.
இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவது எப்படி என்பது பரமரகசியம். இரட்டை இலைக்காக எந்த எல்லைக்கும் செல்வோம் என்று ஒ. பன்னீர் செல்வம் பரபரப்பு பேட்டி.
கேரளாவை சேர்ந்த ஞானேஷ் குமார், பஞ்சாப்பை சேர்ந்த சுக்பிர் சிங் ஆகியோர் தேர்தல் ஆணையர்களாக நியமனம்.
பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைப்பு இரவு முதல் அமலுக்கு வந்தது. சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 100 ரூபாய் 75காசுகளுக்கும், டீசல் 92 ரூபாய் 34 காசுகளுக்கும் விற்பனை.
அரசு தனியார் பங்களிப்பின் (Hybrid Annuity Model) கீழ் அடையாறு ஆற்றை சீரமைப்புதிட்டத்திற்காகமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ரூ.778.26 கோடி மதிப்பீட்டில் நிர்வாக நிதி அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளார்கள்.
திருப்பதி அருகில் விக்டர் அளவியல் 3.9 புள்ளிகளாக பதிவான நிலநடுக்கம். நிலநடுக்கத்தின் அதிர்வுகள் சென்னை புறநகரிலும் நிலவியதாக தகவல்.
தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் பேரில் சோதனையை தீவிர படுத்திய இரயில்வே பாதுகாப்பு படை. முறையான அவணங்கள் இன்றி இரயிலில் எடுத்து செல்லும் தங்கநகை,பணம் பறிமுதல் செய்யப்படும் என அறிவிப்பு.
மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் மாசி விழாவையொட்டி தேரோட்டம். வடம்பிடித்து அங்காளம்மன்னுக்கு நேர்த்திகடன் செலுத்திய பக்தர்கள்.
மெகா இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு 14000 கோடி ரூபாய்க்கு சுரங்க சாலை கட்டுமான பணிக்கு ஒப்பந்தம். mega நிறுவனம் தேர்தல் பத்திரம் மூலம் 100 கோடி ரூபாய்க்கு நன்கொடை குடுத்த ஒரே மாதத்தில் ஒப்பந்தம் கிடைத்துள்ளது அம்பலம்.
"மாண்புமிகு மேற்கு வங்க முதலமைச்சர் செல்வி மமதா பேனர்ஜி அவர்கள் சாலை விபத்தில் காயமடைந்ததை அறிந்து அதிர்ச்சியும் மிகுந்த வேதனையும் அடைந்தேன். இந்தக் கடினமான நேரத்தில் அவரை எண்ணிக் கவலை கொள்கிறேன். அவர் விரைந்து நலம் பெற விழைகிறேன்." - முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் சமூக வலைதள பதிவு.
சென்னையிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு இன்றும் நாளையும் 920 சிறப்பு பேருந்துகள் இயக்கம். வார விடுமுறையையொட்டி பொதுமக்கள் வசதிக்காக அரசு போக்குவரத்து கழகம் அறிவிப்பு.
உலகளவில் மிகஅதிக வசூல் அள்ளிய மலையாள படம் என்ற வரலாற்று சாதனையை படைத்தது மஞ்சுமல் பாய்ஸ். 175 கோடி ரூபாய் வசூலை தாண்டி உள்ளதாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு படக்குழுவினர் பரவசம்.
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியில் விதர்பா அணியை வீழ்த்தி மும்பை அணி அபார வெற்றி. நாற்பத்தி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தல்.
ஆல் இங்கிலாந்து பேட்மிட்டன் போட்டியில் இந்திய வீரர் லக்சயா சென் காலிறுதிக்கு தகுதி. மகளிர் ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வி.
WPL இறுதி போட்டிக்கு தகுதி பெறும் இரண்டாவது அணி எது என ரசிகர்கள் எதிர்பார்ப்பு. மும்பை பெங்களூரு அணிகள் இன்று பலப்பரீட்சை.
நடிகர் அஜித் குமார் நடிக்கும் 63வது படத்திற்கு குட் பேட் அக்லி என ஆங்கிலத்தில் தலைப்பு.ஜூன் மாதத்தில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் 2025ஆம் ஆண்டு பொங்கலுக்கு படம் ரிலீஸ் ஆகும் என்றும் படக்குழு தகவல்.