சுருக்குப்பை செய்திகள் (18.03.2024)

கல்கி டெஸ்க்

இன்று மாலை 5.30 மணி அளவில் கோயம்புத்தூர் வருகிறார் பிரதமர் மோடி. சாய் பாபா காலனி முதல் RS புரம்வரை ரோட் ஷோவில் பங்கேற்கிறார். பிரதமர் நரேந்திர மோடியின் வருகையையொட்டி இன்று காலை 10 முதல் நாளை காலை 10 மணி வரை போக்குவரத்து மாற்றம்.

PM Modi

பிரதமர் வருகையையொட்டி கோயம்புத்தூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு. ரோட் ஷோ நடக்கும் இடம், இன்று இரவு பிரதமர் தங்கும் இடம் ரேஸ் கோர்ஸ் ஹவுஸ் பகுதி தீவிர கண்காணிப்பு.

Police Protection

பொன்முடியை அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் மறுப்பு தெரிவித்து முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். உச்ச நீதிமன்றம் தண்டனையை தான் நிறுத்தி வைத்து உள்ளதே தவிர, பொன்முடி குற்றவாளி இல்லை என்று தீர்ப்பளிக்கவில்லை என கடிதத்தில் குறிப்பிட்டுயுள்ளதாக தகவல்.

RN Ravi, Ponmudi

மக்கள் உயிரையே பணயம் வைக்கும் சூதாட்ட நிறுவனத்திடம் திமுக பணம் பெற்று இருப்பது வெட்க கேடானது என இ பி எஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தலில் முதலமைச்சருக்கு மக்கள் உரிய பாடம் புகட்டுவார்கள் எனவும் கூறியுள்ளார்.

EPS

மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் முதன்முறையாக சாம்பியன் கோப்பையை வென்றது பெங்களூரு அணி.

RCB

எட்டு விக்கெட்கள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தி சாம்பியன் கோப்பை வென்ற பெங்களூரு பெண்கள் அணியை விராட் கோலி வீடியோ காலில் தொடர்பு கொண்டு பாராட்டு தெரிவித்தார்.

Virat Kolhi | Image Credit: Wikipedia

கோவை அருகே சுற்றி திரியும் ஒற்றை யானையால் பொது மக்கள் அச்சம். ஒருவர் காயம். யானையை வன பகுதிக்குள் விரட்ட மக்கள் வலியுறுத்தல்.

Elephant | Image Credit: treehugger

88% சதவீதம் வாக்குகளை பெற்று மீண்டும் ரஷ்ய அதிபர் ஆகிறார் புடின்.

Putin

'என்னை அதிபராக தேர்வு செய்யாவிட்டால் நாட்டில் ரத்த ஆறு ஓடும்' - அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை.

Donald Trumph | Image Credit: Wikipedia

தேர்தல் கூட்டணி தொடர்பாக எடப்பாடி பழனிசாமியுடன் பாஜக MLA அருள் சந்திப்பு. தொகுதி பங்கீடு பற்றி இன்று அதிகார பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் தகவல்.

Eps, BJP

திமுக கூட்டணியில் காங்கிரஸ் மற்றும் மதிமுக கட்சிக்கான தொகுதி பட்டியல் இன்று வெளியாகும் என்று திமுக தலைமை திட்டம்.

MDMK, Congress, Stalin

நாகை காரைக்கால் மீனவர்கள் குடுவை வலையை பயன்படுத்துவதை எதிர்த்து போராட்டம் நடத்திய நிலையில் ஆட்சியர் பேச்சுவார்த்தையில் சமரசம் அடைந்தது. 21 நாட்களுக்கு பிறகு மீன் பிடிக்க செல்கின்றனர் வேதாரண்யம் கீழ்வேளூர் தாலுகா மீனவர்கள்.

Fisherman | Image Credit: storyofennore

உணவகம், குளிர் சாதன சேவை சுகாதாரம் ஆகியப் பிரிவுகளில் பணியாற்றிய 180 ஊழியர்களை பணி நீக்கம் செய்தது ஏர் இந்தியா நிறுவனம்.

Air India | Image Credit: simpleflying
Lemur beach | Img Credit: Medium