கல்கி டெஸ்க்
ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார் தமிழிசை சவுந்தரராஜன். மக்களவை தேர்தலில் பாஜக சார்பில் தென் சென்னை தொகுதியில் போட்டியிட போவதாக செய்திகள் பரவல். முழு நேர அரசியலில் ஈடுபட போவதாக தமிழிசை சவுந்தரராஜன் அறிவிப்பு.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வேட்புமனு தாக்கல் நாளை தொடங்குகிறது. 40 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகள் தயார்.
பிரதமர் மோடி சேலத்தில் இன்று தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசுகிறார். பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பு. 3000 போலீசார்கள் பாதுகாப்பு, ட்ரோன்கள் பறக்க தடை விதிப்பு என பிரமாண்ட ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
மக்களவை தேர்தலில் பாஜகவுடன் பாமக கூட்டணி அமைத்து போட்டியிடும். நிர்வாக குழு கூட்டத்தில் கூட்டணி முடிவை ராமதாஸ் அறிவித்ததாக கட்சியின் செயலாளர் வடிவேல் இராவணன் அறிவித்தார். சேலம் கூட்டத்தில் பிரதமர் மோடியை அன்புமணி ராமதாஸ் சந்திக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்.
நாடாளுமன்ற தேர்தலுக்கான பரப்புரையை மார்ச் 23ஆம் தேதி முதலமைச்சர் மு.க ஸ்டாலின் திருவாரூரில் தொடங்க உள்ளதாக தகவல்.
திருச்சியில் வரும் 24ஆம் தேதி மக்களவை தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார் இ.பி.எஸ். 31ஆம் தேதி வரை முதற்கட்ட சூறாவளி பிரசாரம் மேற்கொள்ள இருப்பதாக அதிமுக சார்பில் அறிவிப்பு.
அதிமுக கூட்டணியில் பாமக இடம் பெறாததால் தேமுதிக விற்கு கூடுதல் தொகுதிகளை ஒதுக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்.
அதிமுக சின்னம், கொடி, letter pad ஆகியவற்றை ops பயன்படுத்த கூடாது என்ற தடையை உறுதி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்.
கர்நாடக இசைக் கலைஞர் TM கிருஷ்ணாவுக்கு 'சங்கீத கலாநிதி' விருது. சென்னை மியூசிக் அகாடெமி அறிவிப்பைத் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் ரசிகர்களின் பரபரப்புப் பதிவுகள்.
ஜூன் வரையில் பெங்களூர் மற்றும் சுற்றியுள்ள 110 கிராமங்களுக்கு தேவையான குடிநீர் வழங்க படும் என தெரிவித்த கர்நாடக முதலமைச்சர் சித்த ராம்மய்யா. ஆள் துளை கிணறுகளில் தண்ணீர் வற்றிய நிலையிலும் கவுதி மற்றும் கே.ஆர்.எஸ் அணையில் உள்ள தண்ணீரைக் கொண்டு வந்து சமாளிக்க படும் எனவும் பேட்டி.
அவசர காலத்தில் போர் மற்றும் சரக்கு விமானங்களை நெடுஞ்சாலைகளில் தரையில் இறக்குவதற்கான ஒத்திகை வெற்றி. ஆந்திராவின் பாபட்லா வில் அமைக்கப்பட்ட ஒடுதளதில் தரை இறங்கியது N32 சரக்கு விமானம்.
தேர்தல் நேரத்தில் மக்களை ஏமாற்ற அரசியல் கட்சி தலைவர்கள் நாடகம். போக போக சாயம் வெளுக்கும் என நடிகர் மன்சூர் அலிகான் காட்டம்.
ரஷ்யா அதிபர் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற புதின்க்கு பிரதமர் மோடி வாழ்த்து. இந்திய ரஷ்ய கூட்டன்மையை மேலும் வலுப்படுத்த ஒன்று இணைந்து செயல்படுவோம் என பதிவு.
தமிழகம் முழுவதும் பறக்கும் படையினரின் அதிரடி சோதனை. உரிய ஆவணங்கள் இன்றி வாகனங்களில் எடுத்து செல்ல படும் பணம் பரிசு பொருட்கள் பறிமுதல்.
கேரளாவில் விமானநிலையத்தில் இருந்து ஹோட்டல் வரை ரசிகர் களின் வெள்ளத்தில் மிதந்து சென்ற நடிகர் விஜய் கார். ரசிகர்கள் காரை சூழ்ந்து நெருங்கியதில் கார் கண்ணாடி உடைந்தது.
பைக் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த சைத்தான் பட நடிகை அருந்ததி நாயர் தீவிர சிகிக்சை பிரிவில் அனுமதி. வெண்டிலேட்டர் உதவியுடன் உயிருக்கு போராடிவருவதாக தகவல்.
மக்களவை தேர்தலில் வேட்பாளர்களுக்கான செலவு தொகை 95லட்சம் ரூபாய்யாக உயர்வு. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தகவல்.
எல்லைதாண்டி ஆப்கானிஸ்தானில் பாக்கிஸ்தான் நடத்திய வான் வழி தாக்குதலுக்கு ஆப்கானிஸ்தான் அரசு கடும் கண்டனம். குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரிழந்த சோகம். எல்லையில் தலிபான் ராணுவத்தினர் குவிப்பு.