கல்கி டெஸ்க்
தமிழகத்தில் 31 தொகுதிகளிலும் புதுச்சேரியிலும் வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மனு தாக்கல் செய்ய அனுமதி. வேட்பு மனு தாக்கலின் போது வேட்பாளருடன் சேர்த்து 5 நபர் மட்டுமே இருக்க அனுமதி.
மக்களவை தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களின் பட்டியல் இன்று வெளியீடு. காலை 10மணிக்கு தேர்தல் அறிக்கை வெளியீடு.
மக்களவை தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியாகும் என தகவல். கூட்டணி கட்சிகள் உடன் தொகுதி பங்கீடு நிறைவுபெறவும் வாய்ப்பு.
தமிழகத்தில் தனக்கு கிடைத்து வரும் ஆதரவை நாடே அச்சிரியத்துடன் பார்ப்பதாக பிரதமர் மோடி பெருமிதம். ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ்நாட்டில் ஒவ்வொரு வாக்கையும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வழங்க மக்கள் முடிவு செய்து விட்டதாகவும் உறுதி.
இன்னும் இரு நாட்களில் தமிழகத்தில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் வெளியாகும் எனவும் தமிழ்நாட்டில் ராகுல் காந்தி பிரச்சார சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும் செல்வப்பெருந்தகை பேட்டி.
பாஜக வேட்பாளராக கோயம்புத்தூரில் அண்ணாமலையும், நீலகிரியில் எல்.முருகனும் களமிறங்கக் கூடும் எனவும் தகவல்.
பெங்களூர் கஃபேவில் குண்டு வைத்தவர்கள் தமிழ்நாட்டில் இருந்து வந்தவர்கள் என மத்திய அமைச்சர் ஷோபா பேசியதாக முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் இ.பி.எஸ் கண்டனம்.
கண்டனம் வலுத்திருப்பதை அடுத்து ஒன்றிய பாஜக அமைச்சர் ஷோபா தமிழர்களிடம் மன்னிப்பு கோரினார். குண்டு வெடிப்பு தொடர்பான தம்முடைய கருத்தை திரும்ப பெறுவதாகவும் அறிவிப்பு.
தாய்லாந்து கண்காட்சியில் இருந்து இந்தியா கொண்டுவர பட்ட புத்தர் மற்றும் அவரது சீடர்களின் எலும்பு படிவங்கள். அரசு சார்பில் பெற்றுக் கொண்டு வழிபாடு நடத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் மீனாட்சி லேகி.
மத்திய பிரதேச மாநிலத்திற்கு நடிகர் அஜித் குமார் bike ride சென்றுள்ளதாக தகவல். அண்மையில் மருத்துவ சிகிச்சையில் இருந்த அஜித் தற்போது fit ஆகவும் சுறுசுறுப்பாகவும் இருப்பதாகவும் அவரது புகைப்படங்களை பகிர்ந்தார் மேலாளர் சுரேஷ் சந்திரா.
திருவனந்தபுரம் ஸ்டேடியத்தில் விஜயின் GOAT படப்பிடிப்பு. திரளாக வந்த ரசிகர்களுக்கு வேன் மேலேறி நின்று கையசைத்த விஜய்.
சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள கங்குவா படத்தின் முன்னோட்ட காட்சிகள் வெளியீடு. சிறுத்தை சிவா இயக்கத்தில் பாபி லியோன் உள்ளிட்டோர் நடித்துள்ள படத்தின் இறுதி கட்ட பணிகள் தீவிரம்.
zomatoவில் சைவ உணவு விநியோகம் செய்ய பச்சை சீருடையுடன் தனிப் பிரிவு அமைக்கப்பட்டதிற்கு எதிர்ப்பு. உணவில் தீண்டாமை என விமர்சனங்கள் எழுந்த நிலையில் அறிவிப்பு திரும்ப பெறப்பட்டது.
இந்திய பங்குச்சந்தை வர்த்தகத்தில் கடும் சரிவு காரணமாக ஒரே நாளில் முதலீட்டாளர்களுக்கு 5 லட்சம் கோடி ரூபாய் இழப்பு.
கேரள மீனவர்கள் உள்ளிட்ட 80 பேரை சிறைபிடித்த தூத்துக்குடி மீனவர்கள். நடுக்கடலில் மோதல்.
வடமாநிலங்களில் களைகட்ட தொடங்கியது ஹோலி பண்டிகை. உத்தரப்பிரதேசத்தில் ஆண்களை கட்டைகளால் அடித்து பெண்கள் கொண்டாட்டம்.
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் RCB பெண்கள் அணியினருக்கு உற்சாக வரவேற்பு. வெற்றி கோப்பையுடன் வீராங்கனைகளை கண்டு ஆரவாரம் செய்த ரசிகர்கள்.
சென்னை சேப்பாக்கத்தில் CSK வீரர்களின் பயிற்சி ஆட்டத்தை காண குவிந்த ரசிகர்கள். மைதானத்தில் அனுமதிக்காததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர தெப்போற்சவம் இன்று முதல் 5 நாட்களுக்கு நடைபெறும் அறிவிப்பு.