சுருக்குப்பை செய்திகள் (21.03.2024)

கல்கி டெஸ்க்

ரஷ்ய அதிபர் புதின் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். பொது தேர்தலுக்கு பிறகு தங்கள் நாடுகளுக்கு வருமாறு இரு நாட்டு தலைவர்களும் மோடிக்கு அழைப்பு விடுத்தனர்.

putin, zelensky, modi

மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் 32 தொகுதிகளில் அதிமுக நேரடி போட்டி. திமுகவை காட்டிலும் 11 தொகுதிகள் கூடுதலாக அதிமுக களம் காணுகிறது. 18 தொகுதிகளில் திமுக அதிமுக இடையே நேரடி போட்டி.

ADMK, DMK

இந்திய கூட்டணி ஆட்சிக்கு வந்தால் வீட்டு சமையல் சிலிண்டரின் விலை 500ரூபாயாக குறைக்கப்படும் எனவும் பெட்ரோல் விலை 75 ரூபாய் ஆகவும் டீசல் விலை 65 ரூபாய் ஆக குறைக்கப்படும் எனவும் திமுக அறிவிப்பு.

Stalin

இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார் நடிகர் கமல்ஹாசன். இளையராஜாவை பற்றி படம் எடுக்க வேண்டும் என்றால் 8 படங்கள் வரை எடுக்கலாம் என்றும் கருத்து. இளையராஜா என பெயரிடப்பட்டுள்ள படத்தை அருண் மாதேஷ்வரன் இயக்க தனுஷ் நடிக்கிறார்.

Kamal Hasan, Ilayaraja, Dhanush

திருவனந்தபுரத்தில் நடந்த கோட் படப்பிடிப்புக்கு இடையே கேரள ரசிகர்களை சந்தித்த நடிகர் விஜய். ரசிகர்களை சந்திப்பது பெரும் மகிழ்ச்சி அளிப்பதாக மலையாளத்தில் பேச்சு.

Vijay

பொன்முடி மீண்டும் அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைக்க அளுநருக்கு உத்தரவு இடக் கோரிய தமிழக அரசின் மனு உச்ச நீதி மன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு இன்று விசாரணை.

Ponmudi, Chandrachud

மூளையில் ஏற்பட்ட ரத்த கசிவு காரணமாக ஈஷா யோகா மைய நிறுவனர் jakki vasudev மருத்துவ மனையில் அனுமதி.அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ள jagi vasudev விரைந்து நலம் பெற பிரதமர் மோடி ஆகியோர் வாழ்த்து. டெல்லி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தகவல்.

Jakki Vasudev

நடிகர் அஜித் குமார் இளைஞர் ஒருவருக்கு மலை சாலையில் Race bike ஓட்ட பயிற்சி அளித்த வீடியோ இணையதளத்தில் வைரல்.

Ajith

அர்ஜென்டினாவில் 200 விழுக்காடுகள் அதிகரித்த டெங்கு பாதிப்பு. நோய் தடுப்பு நடவடிக்கையில் அரசு தீவிரம்.

Dengue

17வது IPL தொடர் சென்னையில் நாளை தொடக்கம். முதல் போட்டிக்கான CSK Bangalore அணி வீரர்கள் தீவிர பயிற்சி.

IPL 2024

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 32 பேர் சிறைபிடிப்பு. மீனவர்களின் 5 படகுகளையும் பறிமுதல் செய்தது இலங்கை கடற்படை. இலங்கை கடற்படையின் அத்துமீறர்ரால் தமிழக மீனவர்கள் கொந்தளிப்பு.

Ship

மத்திய அரசின் திட்டங்களை குறித்து பரப்பப்படும் வதந்திகளை கட்டுப்படுத்த நடவடிக்கை. வலைத்தளங்களில் பரவும் தவறான தகவல்களை தடுக்க உண்மை கண்டறியும் குழு அமைப்பு.

Fake News

மியாமி ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் முதல் சுற்றில் ஆன்டி முர்ரே வெற்றி. முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை பிசுல்கோ வால் முதல் சுற்றில் அதிர்ச்சி தோல்வி.

Andy Murray | Image Credit: Skysports

லோகேஷ் கனகராஜ் ஸ்ருதி ஹாசன் இணைந்து நடித்துள்ள 'இனிமேல்' பாடலின் டீசர் இன்று மாலை 6.30 மணிக்கு வெளியாகிறது என்ற அறிவிப்பால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பு.

Movie Poster

திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அதிகாலையில் பெய்த தீடீர் மழை. கோடை வெப்பத்தை தனித்ததால் குளிர்ச்சியான சூழல்.

Rain

கடும் தண்ணீர் கட்டுப்பாடு நிலவும் சூழலில் பெங்களூருவில் ஹோலி பண்டிகையின் போது ஹோட்டல்கள் ரெசார்ட்களில் மழை நடனம் நீச்சல் குளம் பார்ட்டிகளுக்கு கட்டுப்பாடு.

Holi Festival, Bangalore water problem
surukkupai seithigal