கல்கி டெஸ்க்
புதிய மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளார் . கைதான போதிலும் முதலமைச்சர் பதவியிலிருந்து கெஜ்ரிவால் விலகபோவது இல்லை என ஆம் ஆத்மி அறிவிப்பு. சிறையில் இருந்தப்படி ஆட்சி செய்வார் என்றும் ஆம் ஆத்மி கட்சி கருத்து.
வடசென்னை, தென்சென்னை,மத்திய சென்னை,திருவள்ளூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, நாமக்கல்,திருப்பூர் , நீலகிரி, கோவை, பொள்ளாச்சி, கரூர், சிதம்பரம், நாகை, தஞ்சை,மதுரை,விருதுநகர்,நெல்லை, குமரிஉள்ளிட்ட 19 தொகுதிகளிலும் பாஜக களம் இறங்குவதாக அதிகாரப் பூர்வ அறிவிப்பு.
நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு. சின்னம் உறுதியாகாத நிலையில் வேட்பாளரை நாளை அறிமுகம் செய்கிறார் சீமான்.
ஐபிஎல் தொடரின் 17வது சீசன் சென்னையில் இன்று தொடங்குகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் சென்னை பெங்களூரு அணிகள் மோதல்.
சென்னையில் 26ஆம் தேதி, சென்னை குஜராத் அணிகள் மோதும் போட்டிக்கு நாளை முதல் டிக்கெட் விற்பனை. கடும் விமர்சனம் எழுந்தால் உயர்த்திய டிக்கெட் விலையை குறைத்தது சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம்.
சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் பதவியை துறந்தார் எம் எஸ் தோனி. புதிய கேப்டன் ஆக ருதுராஜ் கெய்க்வாட் அறிவிப்பு.
சென்னை கொளத்தூரில் இரசாயனங்களை வைத்து ஆராய்ச்சி செய்தபோது வெடி விபத்து. 12ஆம் வகுப்பு மாணவர் பரிதாபமாக உயிரிழப்பு.
திமுக தலைவர் மு.க ஸ்டாலினின் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் இன்று தொடக்கம். திருச்சியில் பிரம்மாண்ட தேர்தல் பொதுக்கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு.
பதஞ்சலி ஆயுர்வேத மருந்துகள் நோய்களை குணப்படுத்துவதாக தவறான தகவலுடன் விளம்பரம் வெளியிட்டதற்கு உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரிய பதஞ்சலி நிறுவனம்.
தமிழகத்தில் வாக்கு பதிவு நடைபெறும் ஏப்ரல் 19 ஆம் தேதியன்று பொது விடுமுறை. சம்பளத்துடன் கூடிய விடுமுறைநாளாக அறிவிக்குமாறு தமிழக அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு.
மும்பையில் அலன்னா பாண்டே வளைகாப்பு நிகழ்ச்சியில் பாலிவுட் பிரபலங்கள் திரளாக பங்கேற்று வாழ்த்து தெரிவித்தனர்.
சிவகார்த்திகேயனின் 'அமரன்' திரைப்படத்திற்கான புதுச்சேரியில் தொடர்ந்து 30 நாட்களாக படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது இன்னும் 20 நாள்கள் படப்பிடிப்பை தொடர்ந்து வெளியீட்டு பணிகளை தொடங்க படக்குழு திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் இன்றுடன் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நிறைவு பெறுகின்றன. தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறவுள்ள நிலையில் விடைத்தாள் மதிப்பீட்டை ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 13ஆம் தேதிக்குள் முடிக்கவும்,பொதுத்தேர்வு முடிவுகளை மே 6ஆம் தேதி வெளியிடவும் திட்டம்.
தங்கவிலை தொடர்ந்து 3 நாட்களில் சவரனுக்கு ரூ.1160 உயர்ந்து இன்று ரூ.50000 நெருங்கியது.
மக்களவை தேர்தலில் பாஜக vs திமுக தொகுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு.
கோவை: அண்ணாமலை vs கணபதி ராஜ்குமார்
தென் சென்னை: தமிழிசை சௌந்தராஜன் vs தமிழச்சி தங்கபாண்டியன்
பெரம்பலூர்: பாரிவேந்தர் தாமரை vs அருண் நேரு
மக்களவை தேர்தலில் பாஜக vs திமுக தொகுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு.
நிலகிரி: எல்.முருகன் vs ஆ.ராசா
மத்திய சென்னை: வினோஜ் பி.செல்வம் vs தயாநிதி மாறன்
வேலூர்: ஏ.சி.சண்முகம் vs கதிர் ஆனந்த்
கர்நாடக இசை கலைஞர் T M கிருஷ்ணாவிற்கு சங்கீத கலாநிதி விருது அறிவிக்கப்பட்டு இருப்தைத் தொடர்ந்து கர்நாடக சங்கீத கலைஞர்கள் மற்றும் ரசிகர்கள் கொந்தளிப்பு. முகநூல் மற்றும் x தளங்களில் குவியும் பதிவுகள்.