மரணத்தை வெல்ல ஒரு தொழிற்நுட்பம்! கூகுள் நிறுவனத்தின் அசத்தலான ஆய்வு!

கண்மணி தங்கராஜ்

"கூகுள்" என்ற பெயர் "கூகோல்" என்பதிலிருந்து தான் பெறப்பட்டது இது 1ஐத் தொடர்ந்து 100 பூஜ்ஜியங்களைக் குறிக்கும் ஒரு கணிதச் சொல்லாகும்.

Google

ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் 1998 இல் ‘லாரி பேஜ்’ மற்றும் ‘செர்ஜி பிரின்’ ஆகிய இருவரால் தான் முதன்முதலில் கூகுள் நிறுவப்பட்டது.

கூகுள் தளம் துவங்கப்பட்ட போது பணத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நிறுவனத்தை நடத்த ஓர் இடம் இல்லாத காரணத்தால் முதன்முதலாக ஒரு கார் ஷெட்டில் தான் கூகுள் நிறுவனத்தின் அலுவலகம் இயங்கியுள்ளது.

Google Company

கூகுள் நிறுவனம் தொடங்கப்பட்ட சில நாட்களிலே பெரும் வளர்ச்சியைக் எட்டியது. 2000வது ஆண்டிலேயே நியூயார்க்கில் கூகுள் நிறுவனம் புதிய அலுவலகத்தைத் தொடங்கியது.

New York Company

ஒவ்வொரு முறையும் கூகுள் தன்னை மேம்படுத்திக் கொள்ள மிகவும் தீவிரமாக இயங்கிவருகிறது. 2001ம் ஆண்டு கூகுள் சர்ச் இன்ஜினின் அடுத்த கட்ட மேம்பாடாகக் கூகுள் இமேஜ் அறிமுகப்படுத்தப்பட்டது.

Google Search

அதன் இமேஜ் குறித்த மேம்பாட்டிற்காக பயனாளர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது கூகுள். தொடக்கத்தில் சுமார் 250 மில்லியன் புகைப்படங்களை தன்னுள் கொண்டிருந்தது. ஆனால் இப்போது கணக்கிட முடியாத அளவிலான இமேஜ்களை கூகுள் கொண்டிருக்கிறது.

Google Image

கூகுள் நிறுவனத்தின் இந்த பிரபலத்திற்கு முக்கியக் காரணமாக இருப்பது ‘ஜிமெயில்’ அறிமுகம் தான். 2004ஆம் ஆண்டு கூகுளால் அறிமுகமான இந்த ஜிமெயில் சேவையுடன் 1 ஜிபி சேமிப்பகம் மற்றும் மேம்பட்ட தேடல் திறன்களையும் கூகுள் நிறுவனம் வழங்கத்தொடங்கியது.

Gmail

2006ஆம் ஆண்டு தான் சீன அரசாங்க விதிகளுக்கு இணங்க தணிக்கை செய்யப்பட்ட பதிப்பில் கூகுள் தனது தேடுபொறியை சீனாவில் அறிமுகப்படுத்தியது.

Google in China

கூகுள் டூடுல் மக்கள் மத்தியில் பெரும் பிரபலம் அடைந்துள்ளது. இன்று ஒவ்வொரு நிகழ்வுக்கும் கூகுள் புதிய டூடுலை வெளியிட்டு வருகிறது.

Google Doodle

கூகுளின் இணையதளம் 2013ம் ஆண்டு ஆகஸ்ட் 16ம் தேதி, 5 நிமிடங்கள் மட்டுமே முடங்கியது. இதன் காரணமாக அந்த நேரத்தில் மட்டுமே உலக இன்டர்நெட் பயன்பாடில் 40% குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

Google Down

2013 செப்டம்பரில் ‘Calico Life Sciences LLC’ என்ற நிறுவனத்தை கூகுள் தொடங்கியது. இந்த நிறுவனத்தின் முக்கிய நோக்கம் நோயற்ற மனித வாழ்க்கையை உருவாக்கி மரணத்தை வெல்வதே ஆகும்.

Calico

கூகுள் நிறுவனத்தின் சி.இ. ஓ வாக 2015ஆம் ஆண்டு மதுரையைச் சேர்ந்த சுந்தர் பிச்சை பணியமர்த்தப்பட்டார்.

Sundar Pichai

2020ம் ஆண்டு வரையில் கூகுள் நிறுவனம் ஏறத்தாழ 129 மில்லியன் புத்தகங்களை ஸ்கேன் செய்துதுள்ளதாக அறியப்படுகிறது.

Book Scanned In Google

2002ம் ஆண்டுடைய கணக்கின்படி வெறும் 0.4 பில்லியன் டாலராக இருந்த கூகுள் நிறுவனத்தின் வருவாய், கடந்த 2022ம் ஆண்டு 279 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.

Google Analytics

2023 இல் உலகளவில் முன்னணி தேடுபொறியாக கூகுள் நிறுவனம் 92.82% அதிகளவிலான சந்தைப் பங்கை கொண்டுள்ளது.

Share Market, Google

தற்போது கூகுள் உலகெங்கும் 4.3 பில்லியன் பயனர்களைக் கொண்டு வெற்றிகரமாக இயங்கி வருகிறது.

Google User

கூகுள் உலகளவில் 50 நாடுகளில் 70க்கும் மேற்பட்ட அலுவலகங்களை செயல்படுத்தி வருகிறது. இதன்மூலம் அதனுடைய விரிவான சர்வதேச செல்வாக்கை நிரூபிக்கிறது.

Google office

சராசரியாக ஒரு நாளைக்கு கூகுள் உலகம் முழுவதும் 8.5 பில்லியன் தேடல்களை செயல்படுத்துகிறது.

Google Search
Surukkupai Seithigal
சுருக்குப்பை செய்திகள் (21.03.2024)