சுருக்குப்பை செய்திகள் (25.03.2024)

கல்கி டெஸ்க்

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் 111 வேட்பாளர்கள் அடங்கிய 5வது பட்டியலை வெளியிட்டது பாஜக. ரவிசங்கர் பிரசாத், நடிகை கங்கனா ரனாவத், மேனகா காந்தி, ஜெகதீஷ் ஷெட்டர், தொழிலதிபர் நவின் ஜிண்டல் உள்ளிட்டோருக்கு இடம்.

BJP Candidate

தமிழ்நாட்டின் பல தொகுதிகளில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் வீடு வீடாக துண்டு பிரசுரங்கள் விநியோகித்தும் திறந்த வாகனங்ககளில் நின்று கொண்டு வாக்கு கேட்டும் தீவிர பரப்புரை.

Campign

கோவையில் ஏப்ரல் 10ஆம் தேதிக்கு பின் அதிமுகவினரும் திமுகவினரும் ஒன்று சேர்ந்து விடுவார்கள் என அண்ணாமலை விமர்சனம். தம்மை தோற்கடிக்க பங்காளி கட்சி ஒன்றாகி விடுவார்கள் என்றும் கருத்து.

annamalai

ஜம்மு காஷ்மீர் சர்வதேச எல்லையில் பாதுகாப்பு படையினர் ஹோலி கொண்டாட்டம். ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவினர் ஒருவருக்கொருவர் வண்ண பொடிகளை பூசி உற்சாகம்.

Security forces

நாடுமுழுவதும் இன்று ஹோலி பண்டிகை கொண்டாட்டம். அனைவரது வாழ்விலும் புதிய ஆற்றலும் உற்சாகமும் ஏற்படட்டும் என பிரதமர் வாழ்த்து.

Holi, PM Modi

உத்தர பிரதேச மாநிலம் மதுராவில் உள்ள பிரியகாந்த் ஜூ கோவிலில் ஹோலி கொண்டாட்டம். பக்தர்கள் மற்றும் பொது மக்கள் உற்சாகம்.

Priyakant Ju temple

லக்னோ அணிக்கு எதிரான ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி. மற்றொரு போட்டியில் மும்பை அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது குஜராத் டைட்டன்ஸ்.

GT,RRC

ஐபிஎல் t20 கிரிக்கெட் தொடரில் இன்று பெங்களூர் மற்றும் பஞ்சாப் அணிகள் மோதல். பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் இரவு 7மணிக்கு போட்டி தொடங்குகிறது.

RCB Vs PKGS

ஆந்திராவின் ராஜமுந்திரி தொகுதியில் NTR மகள் புரந்தேஸ்வரி பாஜக வேட்பாளராக அறிவிப்பு. கேரள வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி எதிர்த்து பாஜக மாநில தலைவர் சுரேந்திரன் போட்டி.

Rahul Gandhi,Surendran,Purandeswari

அரசு பள்ளி மாணவர்களுக்கு இன்று முதல் நீட் பயிற்சி வகுப்பு மீண்டும் தொடங்குகிறது. பொது தேர்வு காரணமாக நிறுத்திவைக்கப்பட்ட நீட் பயிற்சி மீண்டும் தொடங்குவதாக அறிவிப்பு.

Neet Class

10ஆம் வகுப்பு பொது தேர்வு நாளை தொடங்குகிறது. 9லட்சத்து 38ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்.

10th Exam

கோடை வெயிலின் தாக்கத்தால் நீலகிரி மாவட்டத்தில் வற்றத் தொடங்கிய அணைகள். மின்உற்பத்தி பாதிக்கும் சூழலில் பல்வேறு மாவட்டங்களில் நீர் ஆதாரம் கேள்வி குறியாகும் அபாயம்.

Nilagiri

பங்குனி உத்திர திருவிழாவையொட்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் திருக்கல்யாண வைபவம். ஆயிரக்கண பக்தர்கள் சாமி தரிசனம்.

Temple | Image Credit: thiruvannamalai

சிவகார்த்திகேயன், நாக சைதயன்யா படங்களில் தற்போது நடித்து வரும் சாய் பல்லவி, நிதிஷ் கல்யாண் இயக்கவுள்ள ராமாயணம் படத்தில் சீதையாகவும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதையடுத்து தான் ஒரு புதிய படத்தை இயக்க போவதாக சாய் பல்லவி அறிவிப்பு. தயாரிப்பாளர் கிடைத்ததும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Sai Pallavi | Image Credit: imdb

ஜி.வி.பிரகாஷ் & ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள 'டியர்' திரைப்படம் வரும் ஏப்ரல் 11ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

DeAr Movie Poster
Golden Temple