சுருக்குப்பை செய்திகள் (26.03.2024)

கல்கி டெஸ்க்

தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளையுடன் முடிகிறது. வேட்பாளர்கள் தாக்கல் செய்யும் மனுகள் வியாழக்கிழமை பரிசீலனை.

Nomination Filling

தமிழகத்தில் 39 தொகுதிகளுக்கு இதுவரை 471 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருப்பதாக தேர்தல் ஆணையம் தகவல்.

Nomination Filling, Election Commision

தமிழகத்தில் பாஜக வேட்பாளரை ஆதரித்து ஏப்ரல் முதல் வாரத்தில் பிரதமர் மோடி பரப்புரை மேற்கொள்ளவுள்ளதாக தகவல். தஞ்சை, விருதுநகர், கரூரில் நடக்கும் பொது கூட்டத்தில் பங்கேற்க கூடும்.

PM modi

உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் தமிழகத்தில் பரப்புரை மேற்கொள்ள வாய்ப்பு.

Amit Shah, Rajnath Singh

சென்னை சூப்பர் கிங்ஸ் குஜராத் டைட்டன்ஸ் இன்று மோதல். ஐபில் போட்டியை காண செல்பவர்கள் ஐபில் டிக்கெட்டை காண்பித்து மாநகர பேருந்துகளில் இலவசகமாக பயணிக்கலாம்.

CSK Vs GT

நேற்று நடைபெற்ற பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபில் T20 கிரிக்கெட் போட்டியில் கோலி, தினேஷ் கார்த்தி அதிரடியால் பெங்களூரு அணி வெற்றி.

Virat Koli, Dinesh Karthick

நடிப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இரண்டாவது கட்ட அட்டவணையை வெளியிட்டது பிசிசிஐ. மே 26ஆம் தேதி அன்று சென்னையில் இறுதி போட்டி நடைபெறும் என அறிவிப்பு.

BCCI Timetable

மக்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் சொத்து மதிப்பு தாக்கல். தனக்கும் குடும்பத்தினருக்கும் 19கோடி ரூபாய்க்கு மேல் சொத்து கணக்கு சமர்ப்பித்தார் தமிழிசை சௌந்திரராஜன்.

Tamilisai Soundararajan | Image Credit:

போயிங் நிறுவன தலைமை செயல் அதிகாரி டேவ் கால்ஹூன் ராஜினாமா. பாதுகாப்பு அம்சங்கள் குறைபாடு சர்ச்சை காரணமாக பதவி விலகல்.

Dave Calhoun

காசாவில் உடனடி போர் நிறுத்தத்திற்கான தீர்மானம் ஐநா பாதுகாப்பு சபையில் நிறைவேற்றம். 4 முறை போர் நிறுத்த தீர்மானங்கள் தோல்வி அடைந்த நிலையில் முதல்முறையாக நிறைவேற்றம்.

UN Council

கொடைக்கானலில் உள்ள புலிசோலை அருகே வனப்பகுதி மற்றும் வருவாய் நிலங்களில் பற்றி எரியும் காட்டு தீ. 10க்கும் மேற்பட்ட வனத்துறையினர் தீயை அணைக்கும் பணியில் தீவிரம்.

Forest Fire

பெங்களூருவில் அவசியமற்ற பணிகளுக்கு தண்ணீரை செலவழித்த 22 குடும்பங்களுக்கு தலா 5000ரூபாய் அபராதம். நகரில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் கர்நாடக அரசு அதிரடி.

Bangalore Water Problem

அநியாயம் பண்ணாதீங்க. விரைவில் GOAT படத்தின் அப்டேட் வரும் நண்பா நண்பிஸ் - இயக்குனர் வெங்கட் பிரபு x தளத்தில் பதிவு.

Venkat Prabhu

குடும்பத்துடன் ஹோலி பண்டிகையை கொண்டாடிய லதா ரஜினிகாந்த். முகத்தில் வண்ணப்பொடிகளை பூசி கொண்டு புன்னகையுடன் உள்ள புகைப்படங்களை பகிர்ந்த சௌந்தர்யா ரஜினிகாந்த்.

Soundarya Rajnikanth

பெய்ரூட்டில் நேற்று நடைபெற்ற உலக டேபிள் டென்னிஸ் ஃபீடர் சாம்பியன்ஷிப் மகளிர் பிரிவு இறுதிச் சுற்றில் ஸ்ரீஜா அகுலா, லக்ஸம்பர்க்கின் சாராவுடன் மோதி சாம்பியன் பட்டத்தை வென்றார். இந்திய வீராங்கனை ஸ்ரீஜா அகுலா தங்கப்பதக்கத்தை கைப்பற்றியுள்ளார்.

Srija Akula | Image Credit: butterfl global

கள்வன் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் லிங்குசாமி ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் தனுஷை பார்க்கிறேன் என பாராட்டியுள்ளார்.

Lingusamy, GV Prakash

டெல்லி அப்பல்லோ மருத்துவமனையில் உடல்நலம் தேறி வரும் சத்குரு வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில், செய்தித்தாள் படிக்கும்படியான காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

Sadhguru

சசிகுமார் இயக்கத்தில் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா லீட் கேரக்டரில் நடிக்கவுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. ஹீரோயினை மையமாக கொண்டு உருவாகவுள்ள இந்த படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Nayanthara, Sasikumar
கீரை வகைகள்