கோவீ.ராஜேந்திரன்
உலகில் கீரைகள் முதன்முதலாக தோன்றியது பெர்சியா நாட்டில். 7ம் நூற்றாண்டில் சீனாவில் இது ஓர் உணவுப்பொருளாக அறிமுகமானது.
ஒரு செடியின் இலைகள்தான் நம் உடலுக்குத் தேவையான புரதம், மாவுச்சத்து, கொழுப்பு சத்து, உயிர்ச்சத்து மற்றும் தாதுப்பொருட்களைத் தயாரிக்கின்றன. எனவேதான் அநேக மருத்துவர்கள் தினமும் கீரைகளைச் சாப்பிட சிபாரிசு செய்கிறார்கள்.
கீரையில் வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் உட்பட அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்கள் காணப்படுவதால் இது நமது ஒட்டுமொத்த நல்வாழ்விற்குப் பங்களிக்கிறது.
கீரைகள் நமது நோய் எதிர்ப்பு சக்தியை வலுவடையச் செய்து, நமக்குத் தேவையான ஆற்றலை வழங்குகின்றன.
கீரைகளில் இயற்கை நிறமி ‘குளோரோபில்’ உள்ளது. இது உணவை உடைப்பதற்கும், செரிமான செயல்முறையை ஊக்குவிக்கவும், ஆரோக்கியமான குடலின் செயல்பாட்டிற்கும் உதவும்.
கீரை வகைகளில் காணப்படும் ஆன்டிஆக்சிடன்ட்கள் ஃப்ரீ ரேடிக்கல்களால் நமது செல்களுக்கு ஏற்படக்கூடிய சேதங்களைத் தடுக்கிறது. இதனால் நாள்பட்ட நோய்களுக்கான அபாயம் குறைகிறது.
கீரைகளில் குறைந்த அளவு கலோரிகளும், அதிக அளவு நார்ச்சத்தும் இருப்பதால் பசியைக் கட்டுப்படுத்தி செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தி, உடல் எடையைப் பராமரிப்பதற்கு உதவுகிறது.
உங்கள் மனதை அமைதியாக வைத்திருக்கவும், பதற்றத்தைத் தடுக்கவும், மன அழுத்தமில்லாத வாழ்க்கையை மேம்படுத்தவும் கீரைகள் உதவுகின்றன.
கீரைகளில் உள்ள அதிக அளவு துத்தநாகம் மற்றும் மெக்னீசியம் இரவில் சிறந்த தூக்கத்தை அடைய உதவுகிறது.
கீரைகள் உங்கள் மூளையை இளமையாக வைக்க உதவுகிறது.
கீரைகளிலுள்ள கரோட்டின்கள் கண்பார்வை குறைபாடுகளைத் தவிர்க்க உதவுகிறது.
தினமும் கீரைகளை எடுத்துக்கொள்ள பரிந்துரைக்கப்படும் அளவு பெண்களுக்கு 100 கிராம், ஆண்களுக்கு 80 கிராம், 5 முதல் 10 வயது வரை உள்ள சிறார்களுக்கு 50 கிராம்.
ஒருவேளை உங்களுக்குச் சிறுநீரக கற்கள் இருந்தாலோ, ஹைபோதைராய்டிசம் பிரச்னை உள்ளவராக இருந்தாலோ, கீரையைக் குறைவான அளவில் உண்ண வேண்டும்.