சுருக்குப்பை செய்திகள் (27.03.2024)

கல்கி டெஸ்க்

மயிலாடுதுறை மக்களவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக ஆர். சுதா போட்டி. வேட்பு மனு தாக்கல் இன்றுடன் நிறைவு அடையும் நிலையில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அறிவிப்பு.

R. Sudha

மைக் சின்னத்திற்கு பதில் படகு அல்லது பாய்மர படகு ஒதுக்குமாறு நாம் தமிழர் கட்சி விடுத்த கோரிக்கை. ஒதுக்கப் பட்ட சின்னத்தை மாற்ற இயலாது என தேர்தல் ஆணையம் நிராகரிப்பு.

Seeman

இஸ்ரேல் தாக்குதலால் தனிமை படுத்தப்பட்ட காசாவில் 10 டன் உணவுப் பொருட்களை போர் விமானங்கள் மூலம் வீசிய பிரிட்டன். வடக்கு காசாவில் வீசப்பட்ட நிவாரண பொருட்கள் கடலில் விழுந்ததாக வேதனை.

Britain air drops

ஐபிஎல் கிரிக்கெட் 7வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி. குஜராத் டைட்டன்ஸ் அணியை 63ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

CSK

ஐபில் கிரிக்கெட் தொடரில் 8வது லீக் போட்டியில் ஹைதராபாத் vs மும்பை அணிகள் இன்று மோதல். போட்டி ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் இரவு 7.30மணிக்கு தொடங்குகிறது. முதல் வெற்றியை பதிவு செய்யப்போவது யார் என்று எதிர்பார்ப்பு.

SRH vs MI

தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பறக்கும் படை நடத்திய சோதனையில் நேற்று ஐம்பது லட்சம் ரூபாய் பறிமுதல். ஈரோட்டில் மூட்டை மூட்டையாக பதுக்கி வைக்கப் பட்ட சேலைகள் சிக்கின.

Raid

ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட ஓ.பன்னீர்செல்வம் பெயரில் அடுத்தடுத்து 5 பேர் வேட்பு மனு தாக்கல். தனி சின்னத்தில் களம் இறங்கும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பி.எஸ் க்கு தொடரும் சிக்கல்.

OPS | Wikipedia

'மோடி சொன்ன பொய்கள்' புத்தகத்திற்கு வரவேற்பு கிடைத்ததால் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியீடு செய்வதற்கு தடை கோரி தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்.

Modi Sonna Poikal Book | Amazon

திரைப்பட நகைச்சுவை நடிகர் சேசு காலமானார். உடல்நல குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழப்பு. சென்னை பள்ளிக்கரணை இல்லத்தில் வைக்கப்பட்ட உடலுக்கு திரைபிரபலங்கள் அஞ்சலி.

Sheshu

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வழக்கில் நியாயமான விசாரணை வேண்டும். ஜெர்மனியை தொடர்ந்து அமெரிக்கா அறிவுறுத்தலால் இந்தியா அதிருப்தி.

Aravind Kejiriwal

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான உலக கால்பந்து தகுதிச் சுற்று போட்டி. இந்திய ஆடவர் அணி 2-1 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சி தோல்வி.

World Football

5லட்சம் டன் வெங்காயத்தை விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்ய மத்திய அரசு உத்தரவு. கூடுதல் கையிருப்பு தேவைக்காக நடவடிக்கை.

Onion

அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தில் உள்ள பால்டிமோர் பாலத்தின் மீது சரக்கு கப்பல் மோதி விபத்து. பிரம்மாண்ட பாலத்தின் ஒரு பகுதி சரிந்து விழும்காட்சிகள் வெளியீடு. விபத்து காரணமாக பால்டிமோர் துறைமுகத்தில் கப்பல் போக்குவரத்து முற்றிலுமாக முடக்கம்.

Baltimore Bridge

பிரபஞ்ச அழகி போட்டியில் முதன்முறையாக கால்பதிக்கும் சவுதி அரேபியா. 27வயது ஆன ரூமி அல்கஹ்தனி பங்கேற்க உள்ளதாக அறிவிப்பு.

Rumy Alqahtani

இளநிலை CUET தேர்விர்க்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் தேதி ஒத்திவைப்பு. விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கும் கட்டணத்தை செலுத்துவதற்கும் கால அவகாசம் மார்ச் 26ஆம் தேதியிலிருந்து 31ஆம் தேதிக்கு மாற்றம்.

CUET Exam

புனித வெள்ளி மற்றும் வாரவிடுமுறையொட்டி சென்னையிலிருந்து நாளை சிறப்பு பேருந்துகள் இயக்கம். கிளம்பாக்கத்திலிருந்து 505 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று மாநகர போக்குவரத்து கழகம் அறிவிப்பு.

Govt Bus

மணிகண்டன் நடிப்பில் வெளியான 'லவ்வர்' திரைப்படம் இன்று முதல் (மார்ச் 27) டிஸ்னி+ ஹாட்ஸ்டார் OTT தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்படவுள்ளது. விமர்சன ரீதியில் மட்டுமில்லாது வசூல் ரீதியிலும் நல்ல வரவேற்பு பெற்றது இத்திரைப்படம்.

Lover Movie

கமல்ஹாசன் நடிப்பில் 1988ம் ஆண்டு வெளியான 'சத்யா' திரைப்படம் ரீமேக்காக உள்ளதாக படத்தை போர் தொழில் பட புகழ் இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்க, கமல் கதாபாத்திரத்தில் அசோக் செல்வன் நடிக்க இருப்பதாக தகவல்.

Sathya Movie, Ashok Selvan

'கோட்' படத்தின் டிஜிட்டல் விற்பனை குறித்து லேட்டஸ்ட் தகவல் - விஜய்யின் முந்தைய 'லியோ' படத்தின் ஓடிடி உரிமையை கைப்பற்றிய நெட்பிளிக்ஸ் நிறுவனமே 'கோட்' பட ரைட்ஸையும் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

GOAT, Netflix

'லியோ' படத்தின் உரிமையை ரூ. 125 கோடி கொடுத்து வாங்கிய தற்போது 'கோட்' ஓடிடி ரைட்ஸை ரூ. 105 கோடிக்கு மட்டுமே வாங்கியுள்ளதாக தகவல்கள்.

Leo,GOAT,Netflix
Chepauk Stadium