கல்கி டெஸ்க்
தமிழ்நாடு உட்பட முதற்கட்ட மக்களவை தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் நிறைவு.தமிழகத்தின் 39 தொகுதிகளில் 1403 பேர் மனு தாக்கல் செய்திருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு.
தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுகளை வாபஸ் பெற நாளை மறுநாள் வரை அவகாசம். போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதி பட்டியல் 30ஆம் தேதி மாலை வெளியாகும்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் வேட்பு மனு தாக்கல் இன்று பரிசீலனை. வேட்பு மனு தாக்கல் ஏற்கக்தக்கதா என வேட்பாளர் முன்னிலையில் தேர்தல் அலுவலர்கள் ஆய்வு.
தமிழகத்தில் உரிய அனுமதி இன்றி எடுத்து சென்றதாக இதுவரை சுமார் 70 கோடி ரூபாய் பணம், பரிசு பொருட்கள் பறிமுதல். மாநிலத்தில் 117 தேர்தல் பார்வையாளர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தகவல்.
தமிழ்நாட்டில் 6 கோடியே 23 லட்சம் வாக்காளர்கள் இருப்பதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தகவல். 85 வயதுக்கு மேல் 6 லட்சம் பேரும், 18 வயதான முதன் முறை வாக்காளர்கள் சுமார் 11 லட்சம் பேரும் இருப்பதாக பேட்டி.
மக்களவை தேர்தலில் மதிமுக விற்கு பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் அறிவிப்பு. ஒரே மாநிலத்திற்குள் ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிடும் கட்சிகளுக்கு மட்டுமே ஒரே சின்னம் ஒதுக்க முடியும் என்ற தேர்தல் ஆணைய விளக்கம் ஏற்பு.
மக்களவை தேர்தலில் விசிக கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுப்பு. கடந்த தேர்தல்களில் ஒரு சதவீத வாக்குகளை கூட விசிக பெறவில்லை என கூறி நிராகரித்தது தேர்தல் ஆணையம்.
கேரள முதலமைச்சர் பினராயி விஜயனின் மகள் மீது சட்டவிரோத பணம் பரிமாற்றம் தடை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தது அமலாக்கத்துறை. சுரங்க நிறுவனத்திடமிருந்து 1 கோடி 76 லட்சம் ரூபாய் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் தீவிர மோசடி புலனாய்வு அமைப்பின் புகாரின் அடிப்படையில் நடவடிக்கை.
ஐபிஎல் வரலாற்றில் அதிக பட்சமாக 277 ரன்களை குவித்து வெற்றி பெற்றது ஹைதராபாத் அணி. கடுமையாக போராடி மும்பை அணியை 31 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
சென்னை - நாகர்கோவில் இடையே 30,31ஆம் தேதிகளில் வந்தே பாரத் சிறப்பு ரயில் இயக்கம். ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு பயணிகள் நலன் கருதி தெற்கு ரயில்வே அறிவிப்பு.
12ஆம் வகுப்பு பொது தேர்வில் கணித பாடம் எழுதிய மாணவர்களுக்கு 13 மதிப்பெண்கள் கிடைக்க வாய்ப்பு. வினாத்தாளில் ஏற்பட்ட குளறுபடியால் நடவடிக்கை. ஓரிரு நாட்களில் அறிவிப்பு வெளியாகும் என தகவல்.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் தொடர்புடைய அதிகாரிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை விவரங்களை வழங்க வேண்டுமமென தமிழக அரசிற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.
பண பலம் இல்லாததால் மக்களவை தேர்தலில் போட்டியிடவில்லை - மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்.
ஐபில் தொடரில் டெல்லி - ராஜஸ்தான் அணிகள் இன்று மோதல். ஜெய்ப்பூர் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு போட்டி நடைபெறவுள்ளது.
தமிழ் சினிமா ரசிகர்களின் மனம் கவர்ந்த மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் ஏப்ரல் 5ஆம் தேதி OTT தளத்தில் வெளியாகும் என அறிவிப்பு.
நெல்லை மாவட்டம், காவல் கிணறு மகேந்திர கிரி இஸ்ரோ மையத்தில் மேற்கொள்ளப்பட்ட விகாஸ் இன்ஜின் சோதனை வெற்றி. அடுத்தடுத்து பல்வேறு கட்ட சோதனைகளை நடத்தவுள்ளதாக இஸ்ரோ வட்டாரங்கள் தகவல்.
தமிழ்நாட்டில் 8 இடங்களில் 100 டிகிரி ஃ பாரன்ஹீட் தாண்டி பதிவான கோடை வெப்பம் - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.
நடப்பு கல்வியாண்டு முதல் NET தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் முனைவர் படிப்பிற்கான சேர்க்கையை நடத்தலாம். நாடு முழுவதும் உள்ள அனைத்து பல்கலைக்கழகத்திற்கும் UGC சுற்றறிக்கை.
ஈரோடு திமுக எம்பி கணேசமூர்த்தி காலமானார். கோவை தனியார் மருத்துவமனையில்சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிர் பிரிந்தது.
தமிழக மக்களுக்கு நல்ல திட்டங்களை வகுத்து செயல்படுத்தினால் நடிகர் விஜய் உடன் இணைந்து பணியாற்ற தயார் - தேனீ நாடாளுமன்ற உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத் பேட்டி.
குரூப் 1மெயின் தேர்விற்கான புதிய பாடத்திட்டத்தை இணையத்தளத்தில் வெளியிட்டது TNPSC. கணித பாடம் நீக்கப்பட்டு அறநெறி மற்றும் நேர்மை என்ற பகுதி புதிய சேர்ப்பு.
மேட்ரிட் ஸ்பெயின் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரின் முதல் சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து வெற்றி. கனடா வீராங்கனையை 21-16 மற்றும் 21-12 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்.
இளையராஜா 'பயோபிக்' படத்தில் நிச்சயம் இருப்பேன் என இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.