கண்மணி தங்கராஜ்
நமது கண்களுக்கு 576 megapixel அளவில் பார்க்கும் திறன் உள்ளது. இதனால் நமது கண்களால் 10 மில்லியன் வண்ணங்கள் வரைக்கும் வேறுபடுத்தி பார்க்கமுடிகிறது. மேலும் ஆண்களை விட பெண்களால் தான் அதிக வண்ணங்களை பார்க்கமுடியுமாம்.
சராசரியாக 1 நிமிடத்திற்கு 20 முறை கண்களை இமைக்கின்றோம். ஆனால் செல்போன் அல்லது தொலைக்காட்சி பார்க்கும்பொழுது அதேபோல இமைப்பது இல்லை. இதனால் நமது கண்களுக்கு அதிக பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.
மனிதனுடைய நாக்கில் 8,000 சுவை அரும்புகள் உள்ளன. ஒவ்வோரு அரும்பிலும் 100 செல்கள் இருக்கும். அவைதான் சுவையைக் கண்டுபிடிக்க உதவுகின்றன!
உடலின் மிகவும் வலுவான பகுதி, பல்லின் மீது இருக்கும் எனாமல் தான். இது யானை தந்தத்தை விட வலுவானது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
மனிதர்களாகிய நாம், ஒரு நாளைக்கு, சராசரியாக 30,000 முறை சுவாசிக்கின்றோம்.
நமது உடலில் உள்ள அனைத்து உறுப்புகளுக்கும் இதயம்தான் இரத்தத்தை கொண்டு செல்லுகின்றது.
இதயத்தில் உள்ள அனைத்து இரத்தநாளங்களையும் ஒன்று சேர்த்தால் 97,000 km தூரத்திற்கு இருக்குமாம். இதனை வைத்து நமது பூமியையே 2 முறை சுற்றிவரலாமாம்.
நம்முடைய இதயமானது ஒரு நாளைக்கு சராசரியாக 1,00,000 முறை துடிக்கின்றது. பொதுவாக ஆண்களை விட பெண்களுக்கு வேகமாக துடிக்கின்றது என்று கூறப்படுகின்றது.
ஒவ்வொருவருக்கும் விரல் ரேகைகள், நாக்கில் உள்ள ரேகைகள் மற்றும் வாசனைகள் இவை மூன்றும் மாறுபடும்.
பெண்களோடு ஒப்பிடுகையில் ஆண்கள் தங்களது உடலில் உள்ள கொழுப்பை வேகமாக கரைப்பார்கள். அதிலும் ஆண்கள் ஒரு நாளைக்கு 50 கலோரிகளை குறைப்பார்கள்.
ஆண்களின் உடலில் 6.8 லிட்டர் இரத்தம் இருக்கும். ஆனால் பெண்களின் உடலில் 5 லிட்டர் இரத்தம் மட்டுமே இருக்கும்.
ஒரு மனித முடியின் வாழ்நாளானது சராசரியாக 3-7 வருடங்கள் ஆகும். அதன் பின் அந்த முடியானது உதிர்ந்து, அவ்விடத்தில் புதிய முடி வளரும்.