கல்கி டெஸ்க்
பிரதமர் மோடி பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்வுடன் தொலைபேசியில் உரையாடினார். இருநாடுகளுக்கு இடையே ஆன நல்வுறவு ராஜாங்க நட்புறவு ஆகியவற்றை வலுப்படுத்துவதற்கான யோசனைகள் குறித்து இருதலைவர்களும் கருத்துக்களை பகிர்ந்துகொண்டனர்.
அதேநேரத்தில் வர்த்தகம், முதலீடு, ராணுவம், பாதுகாப்பு,தொழில்நுட்பங்கள் ஆகிய துறைகளை பிரிட்டன் அளிக்கும் ஆதரவுக்கு திருப்தி தெரிவிக்கப்பட்டது.
மேலும் இந்திய பிரிட்டன் இடையிலான தடையில்லா வர்த்தகம் ஒப்பந்தம் குறித்தும் சர்வதேச வளர்ச்சி மற்றும் பிராந்திய விவகாரம் குறித்தும் நரேந்திர மோடியும் ரிஷிசுனக்கும் தங்கள் கருத்துக்களை பகிர்ந்துக்கொண்டனர்.
உச்ச நீதி மன்ற உத்தரவின் படி தேர்தல் பத்தின விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்தது எஸ்பிஐ வங்கி. சீல் இடப்பட்ட கவர்களில் வைத்து தாக்கல் செய்ததாக உச்ச நீதிமன்றத்திடம் தகவல் தெரிவிப்பு.
மக்களவை தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ். 43 வேட்பாளர்கள் கொண்ட பட்டியலில் அசாம்,மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களுக்கான வேட்பாளர்களை அறிவித்தது.
குடியுரிமை திருத்த சட்டத்தால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என மத்திய அமைச்சர் எல்.முருகன் கருத்து. சி ஏ ஏ சட்டம் குறித்து நடிகர் விஜய் உள்ளிட்ட அனைவரும் படித்து தெரிந்துக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தல்.
பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானில் இருந்து டிசம்பர் 31 2014க்கு முன் இந்தியாவிற்குள் நுழைந்தவர்கள் குடியுரிமை பெற தகுதியானவர்கள் என அறிவிப்பு வெளியானது.
சி ஏ ஏ சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என சொல்வதற்கு தமிழக முதலமைச்சருக்கு எந்த அதிகாரமும் கிடையாது என அண்ணாமலை கருத்து. முதலமைச்சர் இப்படி பேசுவது அவர் எடுத்து கொண்ட சத்தியப்பிரமாணத்துக்கு எதிரானது எனவும் பேட்டி.
மக்களவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பத்து இடங்களில் பாமக போட்டியிட உள்ளதாக தகவல். மத்திய அமைச்சகம் கிசன் ரெட்டி, விகேசியின் முன்னிலையில் இன்று கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்திட வாய்ப்பு.
மக்களவை தேர்தலில் பிரேமலதா கேட்கும் மக்களவை தொகுதிகளை வழங்க பாஜக தரப்பு தயாராக இருப்பதாகவும், ஒரு தொகுதியிலாவது தேமுதிக வெற்றி பெற்றால் மாநிலங்களவை சீட்டு பெற்றுக்கொள்ளலாம் என பாஜக நிபந்தனை விதித்ததாகவும் தகவல்.
சென்னையில் பள்ளிகள் மற்றும் கோவில்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இமெயிலின் ip முகவரி ஐரோப்பிய நாடுகளை சேர்ந்தவை என தெரியவந்துள்ளது. சென்னை காவல்துறை அளித்த தகவலை அடுத்து இன்டர்போல் உதவிகோரியது மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம்.
தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில்அடுத்த 2 நாட்களுக்கு பகல் நேர வெப்பநிலை 2 முதல் 3 degree Celsius வரையில் அதிகரிக்க கூடும் என்றும், மார்ச் 18ஆம் தேதி தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் அறிக்கை.
RCB அணி வெற்றி
மகளிர் பிரீமியர் லீக் 2024: மும்பை இந்தியன்ஸ்க்ற்கு எதிரான போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி பெற்றது. பேட்டிங் மற்றும் பந்து வீச்சுயில் அசத்திய எல்லீஸ் பெர்ரிக்கு ப்ளேயர் ஆஃப்த மேட்ச் விருது.
நடிகர் ஜெயராம் நடித்து 11ம் தேதி பொங்கலையொட்டி வெளியான 'ஆப்ரஹாம் ஓஸ்லர்' திரைப்படம் வரும் 20ம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
10 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியிருந்த இந்த படம் சர்வதேச அளவில் 40 கோடிகளை தாண்டி வசூலித்தது. மம்முட்டி கேமியோ ரோலில் நடித்திருந்தது படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுத் தந்தது.
பிரதமர் நரேந்திர மோடி ரஷ்ய அதிபர் புதின் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஆகியோரை தொடர்பு கொண்டு சமரச முயற்சிகள் மேற்கொண்டார். மேலும் பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ள வலியுறுத்தினார்.
கட்டட விதிகளில் திருத்தம்
மாநில வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறையானது உயரம் இல்லாத கட்டிடங்களின் அதிகபட்சமாக அனுமதிக்கப்பட்டிருந்த கட்டிட உயரத்தை 14 மீட்டர் வரை உயர்த்தி உள்ளது. தரை தளம் மற்றும் 2 அடுக்குமாடி வீடுகளுக்கு 9 மீட்டர் உயரத்தில் இருந்து 10 மீட்டர் உயரம் வரை கட்டிக் கொள்ளலாம்.
மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் 39 இடங்களையும்தொகுதிகளையும் திமுக கூட்டணி கைப்படுத்தும். திமுக 55 விழுக்காடுகள் வாக்கு பெரும் என்றும் avp மற்றும் cop இணைந்து நடத்திய கருத்து கணிப்பில் தகவல்.
மக்களவை தேர்தலை ஒட்டி ஆன்லைனில் விளம்பரங்களுக்கு மூன்று மாதங்களில் 37கோடி ரூபாய் செலவிட்ட பாஜக, காங்கிரஸ் கட்சியை விட 300 மடங்கு அதிகம் செலவிட்டு இருப்பதாக தகவல்.
கேரளாவில் பாஜக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாது என ஏபிபி சி voter's கருத்து கணிப்பில் தகவல். 20 தொகுதிகளில் காங்கிரஸ் மட்டுமே 16 இடங்களில் வெற்றி பெறும் என கணிப்பு.
மக்களவை தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து பாஜகவுடன் ttv தினகரன் மற்றும் ஒ.பன்னிர்செல்வம் அணியினர் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை. ஒ.பி.எஸ், ttv தினகரனுக்கு 8 தொகுதிகளை வழங்க பாஜக முடிவு. இரட்டை இலையில் போட்டி என ஒ.பி.எஸ் உறுதி. குக்கர் சின்னத்தில் போட்டியிடுவோம் என ttv நம்பிக்கை.
மகளிர் உரிமை தொகை குறித்து பேச குஷ்புவுக்கு அருகதை இல்லை என பெண்கள் காட்டம். குஷ்பூ உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் வலியுறுத்தல்.
இ சேவை மையம் மூலம் LLR விண்ணப்பிக்கலாம் போக்குவரத்து ஆணையர் அறிவிப்பு.
ஐசிசியில் பிப்ரவரி மாதத்தின் சிறந்த வீரர்கான விருது இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வாலுக்கு என அறிவிப்பு.