கல்கி டெஸ்க்
அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 46 சதவீதமாக உள்ள அகவிலைப்படி 01.01.2024 முதல் 50 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு.
ஹரியானா முதலமைச்சர் பதவியிலிருந்து விலகினார் மனோகர் லால் கட்டார். ஹரியானா அமைச்சரவை கூண்டோடு கலைப்பு.
ஹரியானா புதிய முதலமைச்சராக நயாப் சைனி தேர்வு. புதிய அமைச்சரவை இன்று மாலை பதிவியேற்க இருப்பதாக தகவல்.
அகமதாபாத் - மும்பை சென்ட்ரல், பெங்களூரு ராஞ்சி வாரணாசி கஜிரேபோல் டெல்லி உட்பட மொத்தம் 10 புதிய வந்தே பாரத் ரயில் சேவைகள் தொடக்கம். 87ஆயிரம் கோடி மதிப்பிலான ரயில்வே திட்டங்களை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் செயற்கை நீரூற்றுகளுடன் கூடிய புதிய காலநிலை பூங்காவை அமைச்சர் சேகர் பாபு திறந்து வைத்தார்.
ஒரு நாள் உலக கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடிய ஷமி t20 உலகக்கோப்பை தொடரில் இருந்து விலகல். கணுக்கால் காயத்திற்கான அறுவை சிகிச்சைலிருந்து மீண்டு வருவதால் தொடரில் பங்கேற்க மாட்டார் என பிசிசிஐ அறிவிப்பு.
சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் இணைத்தார் சரத்குமார். பாஜகவுடன் கூட்டணி என அறிவித்த நிலையில் திடீர் இணைப்பு. கட்சி இணைப்பு கூட்டத்திலேயே சமத்துவ மக்கள் கட்சி நிர்வாகிகள் எதிர்முழக்கம் எழுப்பியதால் பரப்பரப்பு.
சிஏஏ வை தமிழ்நாட்டில் அமல்படுத்த மாட்டோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி. நாட்டின் ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்கும் எந்த ஒரு சட்டத்திற்கும் தமிழ்நாடு அரசு இடம்கொடுக்காது என்று அறிவிப்பு.
குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து அசாமில் முழு அடைப்பு சிஏஏ நகலை எதிரித்து பல்வேறு அமைப்பினரும் போராட்டம். குடியுரிமை திருத்த சட்டத்தை கேரளாவில் அமல்படுத்த மாட்டோம் பினராயி விஜயன் திட்டவட்டம்.
குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்த பட்டதுக்கு எடப்பாடி பழனிசாமி, வைக்கோ, திருமாவளவன், கிருஷ்ணசாமி, வேல்முருகன், பிரேமலதா உள்ளிட்டோர் கண்டனம்.
பிளவு வாத அரசியலை முன்னிறுத்தி செயல்படுத்தப்படும் எந்த சட்டமும் ஏற்க தக்கது அல்ல என விஜய், கமல்ஹாசன் அறிக்கை.
காலை உணவு திட்டத்திற்கு பிறகு மாணவர்கள் பள்ளி வருவது அதிகரிப்பு. அரசு திட்டங்கள் குறித்து 11ஆய்வு அறிக்கைகளில் தகவல்.
கார் விபத்தில் சிக்கி மீண்ட ரிஷப் பண்ட் மீண்டும் ஐபில் போட்டிகளில் விளையாடுகிறார் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
பெண்கள் எப்போதும் மற்றவர்களை பற்றி கவலைப்படாமல் தைரியமாக இருக்க வேண்டும்.. தன்னைக் குறித்த விமர்சனங்களுக்கு வரலட்சுமி சரத்குமார் பதிலடி!