கிரி கணபதி
நமது சூரிய குடும்பம் என்பது சூரியன் மற்றும் அதைச் சுற்றி வரும் எட்டு கோள்களை மட்டும் கொண்டது அல்ல. இதில் நாம் கற்பனை செய்து பார்க்க முடியாத பல ஆச்சரியங்களும், மர்மங்களும் நிறைந்துள்ளன.
1. சூரிய குடும்பத்தின் மொத்த நிறையில் 99.86% சூரியனிடம் மட்டுமே உள்ளது. மீதமுள்ள 0.14% மட்டுமே வியாழன், பூமி உள்ளிட்ட மற்ற அனைத்து கோள்கள் மற்றும் விண்கற்களுக்குப் சொந்தமானது.
2. சூரியனுக்கு மிக அருகில் இருக்கும் கிரகம் Mercury தான். ஆனால், அதுதான் வெப்பமான கிரகம் இல்லை. இரண்டாவது இடத்தில் இருக்கும் Venus கிரகம்தான் மிகவும் வெப்பமானது.
3. பூமியில் சூரிய அஸ்தமனம் ஆரஞ்சு அல்லது சிவப்பு நிறத்தில் தெரியும். ஆனால், செவ்வாய் கிரகத்தில் சூரிய அஸ்தமனம் நீல நிறத்தில் தெரியும்.
4. Uranus மற்றும் Neptune ஆகிய கிரகங்களின் வளிமண்டல அழுத்தம் மிகவும் அதிகம். இதனால் அங்குள்ள கார்பன் அணுக்கள் அழுத்தப்பட்டு, வானத்திலிருந்து வைரங்களாக மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
5. விண்வெளி ஒரு வெற்றிடம். எனவே, விண்வெளியில் நீங்கள் எவ்வளவு சத்தமாகக் கத்தினாலும் அருகில் இருப்பவருக்குக் கேட்காது.
6. பூமியில் காற்று மற்றும் மழை இருப்பதால் கால்தடங்கள் அழிந்துவிடும். ஆனால், நிலவில் வளிமண்டலம் இல்லை. எனவே, அப்பல்லோ விண்வெளி வீரர்கள் நிலவில் பதித்த கால்தடங்கள் இன்னும் பல மில்லியன் ஆண்டுகளுக்கு அப்படியே இருக்கும்.
7. செவ்வாய் கிரகத்தில் உள்ள Olympus Mons என்ற எரிமலைதான் சூரிய குடும்பத்திலேயே மிக உயரமானது.
8. சனி கிரகம் பார்ப்பதற்குப் பெரியதாக இருந்தாலும், அதன் அடர்த்தி மிகவும் குறைவு. எந்தளவுக்கு என்றால், சனி கிரகத்தை விடப் பெரிய ஒரு நீச்சல் குளத்தில் அதைப் போட்டால், அது நீரில் மிதக்கும்.
9. வெள்ளி சூரியனை ஒருமுறை சுற்றி வர 225 நாட்கள் ஆகும். ஆனால், அது தன்னைத்தானே ஒருமுறை சுற்றிக்கொள்ள 243 நாட்கள் ஆகும்.
10. Jupiter கிரகம் தனது ஈர்ப்பு விசையால் விண்வெளியில் சுற்றும் பெரிய விண்கற்களைத் தன்னை நோக்கி இழுத்துக்கொள்கிறது அல்லது திசை திருப்புகிறது. இதனால் பூமி பல தாக்குதல்களிலிருந்து தப்பித்து வருகிறது.
நாம் வாழும் இந்தப் பூமி, இந்தப் பிரம்மாண்டமான விண்வெளியில் ஒரு சிறிய புள்ளி மட்டுமே என்பதை நினைக்கும்போது வியப்பாக இருக்கிறது.