கச்சா எண்ணெய்: நீங்கள் அறியாத 10 சுவாரஸ்யமான உண்மைகள்!

கிரி கணபதி

நவீன உலகின் பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் முக்கிய சக்தியாக கச்சா எண்ணெய் விளங்குகிறது. 'கருப்புத் தங்கம்' என அழைக்கப்படும் இந்த எரிபொருள், வாகனங்களை இயக்குவதோடு மட்டும் நின்றுவிடுவதில்லை.

Crude Oil

1. கச்சா எண்ணெய் டைனோசர்களின் படிமங்களிலிருந்து உருவானது என்பது தவறான நம்பிக்கையாகும். பல கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கடல்வாழ் நுண்ணுயிரிகள் மற்றும் பாசிகள் நிலத்தடியில் மக்கிப்போனதே இதன் உண்மையான மூலமாகும்.

Crude Oil

2. கச்சா எண்ணெய் என்றவுடன் அடர்ந்த கருப்பு நிறமே நினைவிற்கு வரும். ஆனால், இது பூமியிலிருந்து எடுக்கப்படும் இடத்தின் தன்மையைப் பொறுத்து மஞ்சள், பச்சை மற்றும் சிவப்பு நிறங்களிலும் கூடக் கிடைக்கிறது.

Crude Oil

3. பெட்ரோல், டீசலைத் தாண்டி, நாம் பயன்படுத்தும் சோப்புகள், வாசனை திரவியங்கள் மற்றும் Lipsticks போன்ற அழகுசாதனப் பொருட்களின் தயாரிப்பிலும் கச்சா எண்ணெயின் துணைப்பொருட்கள் பயன்படுகின்றன.

Crude Oil

4. சர்வதேச வர்த்தகத்தில் கச்சா எண்ணெய் 'பேரல்' (Barrel) கணக்கில்தான் அளவிடப்படுகிறது. ஒரு பேரல் என்பது தோராயமாக 159 லிட்டர்களைக் குறிக்கும்.

Crude Oil

5. சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்பே பாபிலோனியர்கள், எகிப்தியர்கள், தங்களது படகுகளில் நீர் கசியாமல் பாதுகாக்கவும், கட்டுமானப் பணிகளுக்கும் கச்சா எண்ணெயைப் பயன்படுத்தியுள்ளனர்.

Crude Oil

6. நாம் அணியும் Polyester, Nylon போன்ற செயற்கை இழைகளால் ஆன ஆடைகள், கச்சா எண்ணெயிலிருந்து பிரித்தெடுக்கப்படும் ரசாயனங்களைக் கொண்டே தயாரிக்கப்படுகின்றன.

Crude Oil

7. ஆச்சரியமளிக்கும் விதமாக, Aspirin போன்ற சில முக்கியமான வலி நிவாரணி மருந்துகளின் தயாரிப்பிலும் கச்சா எண்ணெயிலிருந்து கிடைக்கும் பெட்ரோகெமிக்கல்ஸ் பயன்படுத்தப்படுகின்றன.

Crude Oil

8. கப்பல் விபத்துகளால் ஏற்படும் எண்ணெய் கசிவுகளைத் தாண்டி, கடலடிப் பாறைகளில் உள்ள இயற்கையான வெடிப்புகள் வழியாகவும் தினமும் கணிசமான அளவு கச்சா எண்ணெய் கடலில் கலக்கிறது.

Crude Oil

9. நாம் மெல்லும் சிலவகை Chewing gums நீண்ட நேரம் மென்மையாக இருப்பதற்காக, பெட்ரோலியத்திலிருந்து பெறப்படும் Polymer கலவைகள் அவற்றில் சேர்க்கப்படுகின்றன.

Crude Oil

10. உலகிலேயே முதன்முதலாக கச்சா எண்ணெயை வணிக ரீதியாக வெட்டியெடுப்பதற்கான கிணறு, 1859-ஆம் ஆண்டு அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் தோண்டப்பட்டது.

Crude Oil

கச்சா எண்ணெய் என்றாவது ஒருநாள் முற்றிலுமாகத் தீர்ந்துபோகக்கூடிய ஒரு வளமாகும். எனவே, சுற்றுச்சூழலையும் எதிர்காலத் தலைமுறையையும் கருத்தில் கொண்டு மாற்று எரிசக்திகளை நோக்கி உலகம் விரைவாக நகர வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

Crude Oil
Orange
குளிர்ச்சிக்கு சாத்துக்குடி இருக்க கோடையைப் பற்றிய பயமேன்?!