தேனி மு.சுப்பிரமணி
அமெரிக்கர்கள் சந்திரன் வழியாக, மாதங்கள் மற்றும் பருவங்களைக் கண்காணித்தனர். இன்றும், பல்வேறு நிலவுகளைக் குறிக்க அவர்கள் உருவாக்கிய பல புனைப்பெயர்கள் மற்றும் சொற்கள் உலகம் முழுவதும் வழக்கத்திலிருக்கின்றன.
பெரும் நிலவு (Super Moon): இவ்வகையான முழு நிலவுகள் ஒளிமயமாகவும் பெரியதாகவும் உள்ளன. ஏனெனில், அவை உங்கள் வழக்கமான சந்திரனை விட பூமிக்கு நெருக்கமாக உள்ளன.
சிறு நிலவு (Micro Moon): இவ்வகையான முழுநிலவுகள் பெரும் நிலவுக்கு எதிரானவை. சந்திரன் அதன் சுற்றுப்பாதையில், தொலைதூரத்தில் இருக்கும் போது இந்த வகையான சிறிய மற்றும் ஒளி குறைந்த முழு நிலவு தோன்றும்.
இரத்த நிலவு (Blood Moon): இவ்வகையான நிலவு முழுச் சந்திர கிரகணத்தின் போது நிகழ்கிறது. மேலும் சிவப்பு அல்லது ஆரஞ்சு நிறங்களை இந்நிலவு வெளிப்படுத்துகிறது.
நீல நிலவு (Blue Moon): ஒரு மாதத்தில் இரண்டு முழு நிலவுகள் வரும் போது, இரண்டாவது வரும் முழு நிலவை நீல நிலவு என்கின்றனர். வானத்தில் சில வேளைகளில் நீல நிலவைக் காணலாம். ஆனால், இது மிகவும் அரிதாகவே இருக்கும்.
ஓநாய் நிலவு (Wolf Moon): தங்கள் கிராமங்களுக்கு வெளியே ஓநாய்கள் ஊளையிடுவதை அடிக்கடி கேட்கும் காலத்தில் வரும் நிலவை ஓநாய் நிலவு என்கின்றனர். ஜனவரி மாதத்தில் வரும் முழுநிலவை இப்படிச் சொல்கின்றனர்.
பனி நிலவு (Snow Moon): இந்த பெயரின் தோற்றம் மிகவும் வெளிப்படையானது. பிப்ரவரி மாதத்தில் வரும் முழு நிலவு வானத்தை ஒளிரச் செய்து, தரையில் பனியை ஒளிரச் செய்யும்.
புழு நிலவு (Worm Moon): குளிர்காலம் முதல் வசந்த காலம் வரை பருவங்கள் மாறும் போது பூமியில் புழுக்கள் மீண்டும் தோன்றுவதால், மார்ச் மாதத்தில் வரும் முழு நிலவு 'புழு நிலவு' என்று அழைக்கப்படுகிறது.
இளஞ்சிவப்பு நிலவு (Pink Moon): ஏப்ரல் மாதத்தில் தெரியும் இந்த நிலவு, இந்த நேரத்தில் கனடாவிலும் அமெரிக்காவிலும் வளரும் இளஞ்சிவப்பு காட்டுப்பூக்களிலிருந்து அதன் பெயரைப் பெற்றது.
மலர் நிலவு (Flower Moon): மே மாதத்தில் பூக்கும் தாவரங்கள் அதிக அளவில் பூக்கின்றன. இதனை அடிப்படையாகக் கொண்டு, மே மாத முழு நிலவு, மலர் நிலவு என்று அழைக்கப்படுகிறது.
செம்புற்றுப் பழ நிலவு (Strawberry Moon): ஜூன் மாதத்தில் செம்புற்றுப் பழங்கள் அதிகம் காணப்படும். இதனை அடிப்படையாகக் கொண்டு, செம்புற்றுப் பழ நிலவு என்று பெயர் ஏற்பட்டிருக்கிறது.
ஆண் வெள்ளாட்டு நிலவு (Buck Moon): ஆட்டின் கொம்பைப் போன்று முழுமையான வளர்ச்சியில்லாமல் தோன்றும் இம்முழு நிலவு ஆண் வெள்ளாட்டு நிலவு எனப்படுகிறது. இது ஆண்டின் நேரத்தைக் குறிக்கிறது.
மீன் நிலவு (Sturgeon Moon): கோடையின் பிற்பகுதியில், ஆகஸ்ட் மாதத்தில் அமெரிக்கா மற்றும் கனடாவில் கிடைக்கும் ஸ்டர்ஜன் எனும் மீனை அடிப்படையாகக் கொண்டு, இந்தப் பெயர் சூட்டப்பட்டது.
சோள நிலவு (Corn Moon): அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளில் சோளத்தை அறுவடை செய்யும் நேரமான செப்டம்பர் மாதத்தில் தோன்றும் முழு நிலவுக்கு, சோள நிலவு எனும் பெயர் ஏற்பட்டது.
அறுவடை நிலவு (Harvest Moon): இலையுதிர்காலத்திற்கு மிக அருகில் இருக்கும் முழு நிலவினை அறுவடை நிலவு என்று அழைக்கின்றனர். இது, பொதுவாக செப்டம்பரில் நிகழ்கிறது. ஆனால், எப்போதாவது அக்டோபரிலும் தோன்றும்.
உறைபனி நிலவு (Frost Moon): நவம்பரில் வரும் இந்த முழு நிலவு குளிர் காலநிலையின் வருகையை குறிக்கிறது.
குளிர் நிலவு (Cold Moon): இந்நிலவு ‘அதிகமான இரவு நேர முழு நிலவு’ (Long Nights Moon) என்றும் அழைக்கப்படுகிறது. இரவுகள் மிக நீளமாகவும் குளிராகவும் இருக்கும் ஆண்டின் நேரத்தை இது குறிக்கிறது.