அணு அளவுள்ள கருந்துளை ஒரு மலையின் எடையா? வியக்க வைக்கும் உண்மைகள்!

கிரி கணபதி

கருந்துளைகள் (Black Holes) பற்றிய வியப்பூட்டும் சில உண்மைகளை இங்கே காண்போம்.

Black Hole

கருந்துளையின் ஈர்ப்பு விசை மிக அதிகம். ஒளியால் கூட அதிலிருந்து தப்பிக்க இயலாது.

Black Hole

இதன் மையப்பகுதி சிங்குலாரிட்டி எனப்படும். அங்கு இயற்பியல் விதிகள் எதுவும் செயல்படாது.

Black Hole

கருந்துளைக்கு அருகில் நேரம் மிகவும் மெதுவாகச் செல்லும். இது சார்பியல் தத்துவத்தின் அடிப்படையாகும்.

Black Hole

இவை வெறும் வெற்றிடங்கள் அல்ல. அதிக அடர்த்தி கொண்ட பருப்பொருட்களின் தொகுப்பாகும்.

Black Hole

நமது பால்வீதியின் மையத்தில் ஒரு பெரிய கருந்துளை உள்ளது. அது மிகப்பிரம்மாண்டமான தோற்றம் கொண்டது.

Black Hole

நட்சத்திரங்கள் வெடித்துச் சிதறும்போது இவை உருவாகின்றன. இந்த நிகழ்வு சூப்பர்நோவா என்று அழைக்கப்படும்.

Black Hole

கருந்துளைகள் அனைத்தையும் உள்ளே இழுக்கும் தன்மை கொண்டவை. ஆனால் அவை எதையும் உமிழ்வதில்லை.

Black Hole

ஒளியை உறிஞ்சுவதால் இவற்றை நேரடியாகக் காண முடியாது. கதிர்வீச்சு மூலம் மட்டுமே கண்டறியலாம்.

Black Hole

மிகச்சிறிய கருந்துளைகள் ஒரு அணுவின் அளவில்கூட இருக்கும். ஆனால் அவற்றின் எடை மலைப்பிரம்மாண்டமானது.

Black Hole

ஸ்பகெட்டிஃபிகேஷன் (Spaghettification) என்ற நிகழ்வு இங்கு நடக்கும். பொருட்கள் உள்ளே செல்லும்போது நூலாக நீண்டுவிடும்.

Black Hole

பிரபஞ்சத்தின் பல மர்மங்களை கருந்துளைகள் தன்னுள் மறைத்து வைத்துள்ளன. எதிர்கால அறிவியல் இவற்றின் ரகசியங்களை நிச்சயம் விலக்கும்.

Black Hole
Teeth
10 வருட மஞ்சள் பல்லும் 10 நிமிடத்தில் வெண்மையாகும்... எப்படி தெரியுமா?