பாட்டில் மூடிகளில் ஏன் கோடுகள் உள்ளன? பலரும் அறியாத சீக்ரெட்!

கிரி கணபதி

தண்ணீர் மற்றும் குளிர்பான பாட்டில்களின் மூடிகளில் வரிவரியாகக் கோடுகள் இருப்பதைக் கவனித்திருப்போம். இந்த எளிய வடிவமைப்பின் பின்னால் மறைந்துள்ள காரணங்களை இங்கு காண்போம்.

Bottle cap

1. மூடிகளைத் திறக்கும்போது கைகளுக்கு நல்ல பிடிமானத்தைத் தர இந்தக் கோடுகள் உதவுகின்றன. இதனால் மிக எளிதாகப் பாட்டில் மூடிகளைத் திறக்க முடிகிறது.

Bottle cap

2. குளிர்ந்த நீர் உள்ள பாட்டில்களில் வியர்வை போன்று நீர்த்துளிகள் படியும். அப்போது கைகள் வழுக்காமல் திறக்க இந்த அமைப்பு பெரிதும் பயன்படுகிறது.

Bottle cap

3. தொழிற்சாலைகளில் இயந்திரங்கள் பாட்டில்களை மூடுவதற்கு இது மிகச்சிறந்த பிடிமானத்தைக் கொடுக்கிறது. இதனால் இயந்திரங்கள் மூடிகளை மிகவும் இறுக்கமாக மூடிப் பாதுகாக்கின்றன.

Bottle cap

4. கார்பனேற்றம் செய்யப்பட்ட பானங்களில் உள்ள வாயு வெளியேறாமல் தடுக்க இது அவசியமாகும். இந்தக் கோடுகள் அழுத்தத்தைச் சீராகப் பரவச் செய்து பாதுகாக்கின்றன.

Bottle cap

5. இந்த மூடிகளின் பற்கள் இருபத்தி ஒன்று என்ற கணக்கில் தரப்படுத்தப்பட்டுள்ளன. இது சர்வதேச அளவில் அனைத்து நிறுவனங்களாலும் பின்பற்றப்படும் முக்கிய விதியாகும்.

Bottle cap

6. பற்கள் கொண்ட அமைப்பு மூடியின் திருகு அமைப்போடு சரியாகப் பொருந்துகிறது. இதனால் மூடி பாட்டிலோடு மிகக் கச்சிதமாக இணைந்து கொள்ள உதவுகிறது.

Bottle cap

7. சில மருந்து பாட்டில்களைக் குழந்தைகள் எளிதில் திறப்பதைத் தடுக்க இந்த அமைப்பு உதவுகிறது. 

Bottle cap

8. பிளாஸ்டிக் அல்லது உலோக மூடிகளின் வலிமையை அதிகரிக்க இந்தக் கோடுகள் பயன்படுகின்றன. இது மூடி எளிதில் உடைவதைக் கண்டிப்பாகத் தடுத்து விடுகிறது.

Bottle cap

9. பாட்டில்கள் ஏற்கனவே திறக்கப்பட்டுள்ளதா என்பதை அறிய இந்தக் கோடுகள் வழிகாட்டுகின்றன. மூடியின் கீழ் உள்ள பாதுகாப்பு வளையம் இதோடு இணைக்கப்பட்டிருக்கும்.

Bottle cap

10. 1890-களில் கண்டுபிடிக்கப்பட்ட இந்தத் தொழில்நுட்பம் இன்றும் பயன்பாட்டில் உள்ளது.

Bottle cap

இவ்வாறு பாட்டில் மூடிகளில் உள்ள கோடுகள் பின்னணியில் பல பயனுள்ள அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் காரணங்கள் மறைந்துள்ளன.

Bottle cap
Rangoli
யார் பார்த்தாலும் வியந்து போற்றும் புத்தம் புதிய தீபாவளி கோல டிசைன்கள் இதோ!