நான்சி மலர்
தூக்கம் உடலுக்கு மட்டுமின்றி மனதிற்கும் நல்ல புத்துணர்வை தரக்கூடிய ஒன்றாகும். நீங்கள் உங்கள் உடலுக்கு தரக்கூடிய நல்ல பரிசு தூக்கம் மட்டும் தான். தூக்கம் குறித்த சுவாரஸ்யமான உளவியல் உண்மைகள் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
பெரும்பாலும் நமக்கு வரும் கனவுகள் அன்றைய நாளில் நடந்தவைகளாகவேயிருக்கும். நாம் காணும் கனவுகளில் 95 சதவீதத்தை விழித்த 5 நிமிடங்களுக்குள்ளேயே மறந்து விடுகிறோம்.
நம் கனவில் வரும் முகங்கள் எதுவுமே மூளையாக உருவாக்கியது அல்ல. நம் வாழ்க்கையில் எப்போதோ பார்த்த முகங்களைத்தான் ஆழ்மனம் கனவில் பிரதிபலிக்கிறது.
நாம் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும்போது, கனவில் செய்வது போலவே நிஜத்திலும் நாம் ஓடவோ குதிக்கவோ கூடாது என்பதற்காக நமது உடல் தற்காலிகமாக பாதுகாப்பிற்காக Paralysis நிலைக்குச் செல்லும்.
அதிகமாக தூங்கும் நபர்கள் அதிகம் மனதால் பாதிக்கப்பட்டவர்களாக இருப்பார்கள்.
இரவு 10 மணிக்கு தூங்க செல்பவர்கள் நீண்ட காலம் உயிருடன் இருப்பார்கள் என்று ஆய்வுகள் சொல்கின்றன.
பிற்பகலில் தூங்குவது மூளையின் ஆற்றல் மற்றும் சுறுசுறுப்பை அதிகரிக்கிறது.
இரவில் நல்ல தூக்கம் வர டீ, காபியை தவிர்த்து பாலை தேர்ந்தெடுத்து பருகுங்கள். நன்றாக தூக்கம் வரும்.
ஒரு கடினமான முடிவை எடுக்க வேண்டியிருந்தால், அதைப்பற்றி யோசித்துவிட்டு ஒரு தூக்கம் போட்டு எழுந்து பாருங்கள். காலையில் உங்களால் இன்னும் சரியான முடிவை எடுக்க முடியும்.
'Lucid Dreaming' நிலையில் இருப்பவர்களால் தங்கள் கனவில் நடப்பவற்றைத் தங்கள் விருப்பப்படி மாற்றியமைக்க முடியும்.
பல அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கான ஐடியாக்கள் விஞ்ஞானிகளுக்கு அவர்கள் தூக்கத்தில் இருக்கும் போதுதான் கிடைத்துள்ளன.
சிறு விஷயங்களுக்குக் கூட அதிக கோபம் வருவதற்கு தூக்கமின்மை ஒரு முக்கியக் காரணியாக இருக்கிறது.