பாட்டி வைத்தியம்: கைமேல் பலன் தரும் எளிய முறைகள்!

ஆர்.ஜெயலட்சுமி

தினசரி படுக்கைக்கு செல்லும் முன் ஒரு டம்ளர் வென்னீரில் சிறிதளவு உப்பை போட்டு கலக்கி வாய் கொப்பளித்துவிட்டு படுத்தால் எந்த விதமான பல்நோயும் வராது வாயும் துர்நாற்றம் அடிக்காது. 

வாய் கொப்பளித்து

நரம்பு தளர்ச்சி உள்ளவர்கள் தினமும் ஒருவேளை சாப்பாட்டுடன் முருங்கைக்கீரை சேர்த்து கொண்டு வந்தால் பூரண பலனை காணலாம். 

முருங்கைக்கீரை

காலில் பித்த வெடிப்பு ஏற்பட்டு நடக்க முடியாமல் சிரமப்படுகிறீர்களா ஐந்து நாட்களுக்கு தொடர்ந்து வேப்ப எண்ணையை தடவுங்கள் ஆறு மாதம் வரை இந்த தொல்லையே வராமல் இருக்கும். 

பித்த வெடிப்பு

ஒவ்வொரு நாளும் காலை மாலை இருவேளைகளிலும் துளசியை தின்று வருவதால் உடல்நல ஆரோக்கியத்துடனும் எந்த நோயும் வராமல் தடுக்கலாம். 

துளசி

தினசரி உணவோடு வெங்காயத்தை சேர்த்துக்கொள்வது நல்லது குழந்தைகளுக்கு தினமும் சிறு துண்டு பச்சை வெங்காயத்தை தின்னு கொடுத்து வந்தால் ஜலதோஷம் காய்ச்சல் வரவே வராது. 

ஜலதோஷம் காய்ச்சல்

வெந்தயத்தை ஊறவைத்து அரைத்து தேய்த்து தலைக்கு குளித்து வந்தால் பொடுகு வராது முடியும் செழிப்பாக வளரும்.

பொடுகு

நாலைந்து கிராம்புகளை நசுக்கி அரை கப் தண்ணீர் போட்டு கொதிக்க வைத்து குடித்தால் களைப்பு கைகால் குடைச்சல் நீங்கி நல்ல பசி எடுக்கும்.

கிராம்பு

பிரண்டையை தணலில் வாட்டி சாறு எடுத்து அத்துடன் தேன் கலந்து சாப்பிட்டால் விக்கல் நின்றுவிடும்.

பிரண்டை

தேனீர் தயாரிக்கும்போது ஒரு துண்டு இஞ்சி தட்டி போட்டு கொதித்த பின் சர்க்கரை பால் கலந்து சாப்பிட்டால் பித்தம் குறையும். வயிறு முட்ட சாப்பிட்டு விட்டீர்களா கவலைவேண்டாம் வெங்காயத்தை துண்டாக்கி பச்சையாக சாப்பிடுங்கள் ஜீரணம் ஆகிவிடும். ஒரு டம்ளர் மோரில் ஒரு மிளகு அளவு பெருங்காயத்தை கரைத்து குடித்தால் வாயு வயிற்று வலி குணமாகிவிடும். 

தேனீர்

வயிறு முட்ட சாப்பிட்டு விட்டீர்களா கவலைவேண்டாம் வெங்காயத்தை துண்டாக்கி பச்சையாக சாப்பிடுங்கள் ஜீரணம் ஆகிவிடும்.

ஜீரணம் ஆக..

ஒரு டம்ளர் மோரில் ஒரு மிளகு அளவு பெருங்காயத்தை கரைத்து குடித்தால் வாயு வயிற்று வலி குணமாகிவிடும். 

டம்ளர் மோர்

ஜலதோஷத்திற்கு நல்ல மிளகை அரைத்து பால் விட்டு கொதிக்க வைத்து இளஞ்சூடாக நெற்றியிலும் தொண்டையிலும் தடவினால் குணமாகும்.

ஜலதோஷம்
Vivekananda golden quotes
100 புத்தகங்கள் படிக்க வேண்டாம்... விவேகானந்தரின் இந்த பொன்மொழிகள் போதும்!