எஸ்.மாரிமுத்து
1/15. உழைப்பு கல்லில் இருந்து கூட ரொட்டியை உண்டாக்கும் - ஜெர்மனி.
2/15. உழைப்பே மகிழ்ச்சிக்குத் தந்தையாகும் - பிரான்ஸ்.
3/15. உழைத்தலே பிரார்த்தனை செய்தல் - இலத்தின்.
4/15. உழைப்பவன் வீட்டுக்குள் வறுமை எட்டிப் பார்க்காது - இங்கிலாந்து.
5/15. திராட்சை தோட்டத்திற்கு தேவை மண்வெட்டி. பிரார்த்தனை அன்று- ஆர்மீனியா
6/15. அளவற்ற உழைப்பை தான் மேன்மை என்கிறோம் - லாங் பெல்லோ
7/15. ஏழ்மை என்ற நோய் அகல வேண்டும் என்றால் உழைப்பு என்ற மருந்தை கொடு - எமர்சன்
8/15. உழைப்பவனுக்கு எந்த வேலையும் இழிவல்ல, சோம்பல் தான் இழிவு - கிரீஸ்
9/15. அடிமை போல உழைப்பவன் அரசனைப் போல உயர்வான் - இந்தியா
10/15. அவசர காலத்தின் தேவைக்கு ஓய்வு நேரத்தில் உழைத்து தேடி வை- சீனா
11/15. மனிதன் உழைக்கிறான் இறைவன் வாழ்த்துகிறான் - அமெரிக்கா
12/15. உறங்குகின்ற சிங்கத்தை விட அலைகின்ற நரி மேலானது துருக்கி
13/15. நனையாத கால் சட்டைகளுக்கு உண்ண மீன் கிடைக்காது - பல்கேரியா
14/15. உண்பதை ஒத்தி வைத்தாலும் உழைப்பதை ஒத்தி வைக்காதே - குர்திஸ்கான்
15/15. வயலில் முதலாளாகவும் படுக்கைக்கு கடைசியாளாகவும் இரு - சீனா